விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலின் மூலம் பிரபலமான மைனா நந்தினி இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலக்கி வருகிறார். ரணகளமாக சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் அவ்வப்போது இவர் செய்யும் சேட்டை, காமெடி தான் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஆறுதலை கொடுத்து வருகிறது.
இருந்தாலும் பிக் பாஸ் வீட்டில் இவருடைய நடவடிக்கைகளை ரசிகர்கள் விமர்சித்து தான் வருகின்றனர். ஏனென்றால் ஆரம்ப நாட்களில் இவருடைய நடவடிக்கை பார்ப்பவர்களுக்கு ஒரு குரூப்பாக செயல்படுவது போல் இருந்தது. அதற்கேற்றார் போல் மணிகண்டன் உடன் இவர் நட்பாக இருந்ததும் ஒரு காரணம். ஏற்கனவே விஜய் டிவியின் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் கலந்து கொண்டனர்.
அப்போதிலிருந்தே இவர்களுக்குள் இருக்கும் அந்த நட்பு இப்போது பிக் பாஸ் விளையாட்டில் தெரிவதாக சில விமர்சனங்கள் எழுந்தது. அதையேதான் பார்வையாளர்கள் மைனா நந்தினியிடம் கேள்வியாக எழுப்பியது குறிப்பிடத்தக்கது. தற்போது அதை எல்லாம் ஓரம் கட்டி விட்டு நந்தினி விளையாட்டில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அவர் கடந்த வாரம் வடிவேலுவின் கதாபாத்திரமான நாய் சேகர் போன்று கெட் அப் போட்டு இருந்தார்.
அந்த கேரக்டர் ரசிகர்களை கவர்ந்த நிலையில் இப்போது மைனா நந்தினிக்கு பிக் பாஸ் வீட்டில் ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது என்ற தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி அவருக்கு ஒரு நாள் மட்டுமே 1.5 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டு வருகிறதாம். இதைக் கேட்டு பலருக்கும் மயக்கம் வராத குறையாக இருக்கிறது.
ஏனென்றால் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களிலேயே இவருக்கு தான் அதிகபட்ச சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதை வைத்து பார்க்கும் போது இவர் பிக் பாஸ் வீட்டை விட்டு சென்றால் கை நிறைய சம்பளத்தை அள்ளிக் கொண்டுதான் செல்வார் என்பதில் சந்தேகம் இல்லை. எப்படியும் இவர் இன்னும் சில வாரங்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் நீடிப்பார்.
அந்த வகையில் இந்த நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு வாரம் முடிந்த நிலையில்தான் அவர் வீட்டுக்குள் வந்தார். எப்படி பார்த்தாலும் இவர் 70 நாட்கள் இந்த வீட்டில் இருக்கிறார் என்று வைத்துக் கொண்டாலே அவருடைய சம்பளம் ஒரு கோடியை நெருங்கி விடுகிறது. அதன் அடிப்படையில் மைனாவுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு மிகப்பெரிய ஜாக்பாட்டாக அமைந்திருக்கிறது.