நான் வீழ்வேனென்று நினைத்தாயோ.. பிக்பாஸ் பிரதீப்புக்கு கிடைத்த ராஜ மரியாதை

Pradeep Antony: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 7 பல அலப்பறைகளுக்கு நடுவில் ஒரு வழியாக முடிவு பெற்றது. இருந்தாலும் மாயா அண்ட் கோ இன்னும் ரசிகர்களால் கழுவி ஊற்றப்பட்டு தான் வருகின்றனர். அதே சமயத்தில் பிரதீப் ஆண்டனிக்கான ஆதரவும் பெருகிக்கொண்டே தான் இருக்கிறது.

இந்நிலையில் அவர் ஒரு பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக ராஜ மரியாதையுடன் அழைத்துச் செல்லப்பட்டது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த போட்டோக்களையும், வீடியோவையும் அவருடைய ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என வெளியேற்றப்பட்ட பிரதீப்புக்கு நாலா பக்கம் இருந்தும் ஆதரவு குவிந்தது. இன்னும் சொல்லப்போனால் நிகழ்ச்சியில் இருந்தால் கூட அவருக்கு இப்படி ஒரு ஆதரவும், ரசிகர்கள் வட்டமும் கிடைத்திருக்காது.

அந்த அளவுக்கு அவரை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் பிரதீப் தற்போது ஒரு பள்ளி விழாவுக்கு சிறப்பு விருந்தினராக சென்றிருக்கின்றார். அப்போது அவரை நிர்வாகத்தினர் ராஜமரியாதையுடன் நடத்தி, சால்வை அணிவித்து, நினைவு பரிசு வழங்கியும் கௌரவப்படுத்தி இருக்கின்றனர்.

ராஜ மரியாதையுடன் அழைத்துச் செல்லப்பட்ட பிரதீப்

மேலும் போலீசுடன் பிரதீப் ஆண்டனி கெத்தாக நடந்துவரும் அந்த வீடியோ இப்போது சோஷியல் மீடியாவில் சக்கை போடு போட்டு வருகிறது. என்னதான் ஒருவரை தப்பாக அடையாளப்படுத்தினாலும் மேன்மக்கள் மேன்மக்கள் தான். படித்தவர்களுக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு என்பதை பிரதீப் நிரூபித்து விட்டதாக ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →