1. Home
  2. தொலைக்காட்சி

பிக் பாஸால் என் வாழ்க்கையே நாசமாகிடுச்சு.. கதறும் பிரபலம்

பிக் பாஸால் என் வாழ்க்கையே நாசமாகிடுச்சு.. கதறும் பிரபலம்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றதால் என் வாழ்க்கையை தொலைத்து நிற்பதாக பிரபலம் ஒருவர் பேட்டி கொடுத்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பேராதரவு கிடைத்து வருகிறது. இந்த நிகழ்ச்சி கடந்த 2017-இல் தொடங்கி கிட்டதட்ட 6 சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முதல் சீசனில் இருந்த ஆர்வம் மற்ற சீசன்களில் சற்று குறைவு தான்.

இந்நிலையில் பிக் பாஸால் சிலருக்கு வாழ்வில் தீர்ப்புமுனை ஏற்பட்டாலும் சிலரது வாழ்க்கையை அப்படியே திருப்பி போட்டு உள்ளது. அந்த வகையில் பிக் பாஸ் மூலம் புகழ்பெற்றவர் நடிகை வனிதா. இவருக்கு இதே தொலைக்காட்சியில் அடுத்தடுத்து நிறைய வாய்ப்புகள் கொடுத்திருந்தனர்.

இந்நிலையில் பிக் பாஸ் முதல் சீசனை ஆரவ், காயத்ரி, ஓவியா, சினேகன் போன்ற பலர் கலந்து கொண்டனர். இதில் பிரபல இயக்குனர் பி வாசுவின் மகன் சக்தியும் பங்கு பெற்றிருந்தார். இவர் தமிழில் தொட்டா பூ மலரும், சிவலிங்கா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் பேசிய சக்தி பிக் பாஸ் நிகழ்ச்சி அப்போது தான் முதல் சீசன், இதற்கு முன்பே ஹிந்தி போன்ற மற்ற மொழிகளில் இந்த நிகழ்ச்சியை நான் பார்த்ததில்லை. முதலாவதாக பிக் பாஸில் செல்ல எனக்கு விருப்பமே இல்லை.

இதற்கு முன்னதாக நான் நிறைய சர்ச்சைகளில் சிக்கி உள்ளேன். வீட்டில் உள்ள பிரச்சனை மன அழுத்தம் காரணமாக தான் பிக் பாஸ் வீட்டுக்கு சென்றேன். அங்கு என்னுடன் இருந்தவர்கள் என்னை வேறுவிதமாக திசை திருப்பி விட்டார்கள். பிக் பாஸ் வீட்டிலும் எனக்கு நிறைய மன அழுத்தம் ஏற்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் என் வாழ்க்கையை நாசமாகி விட்டது என்ற அளவுக்கு சக்தி அந்த பேட்டியில் கூறியுள்ளார். மீண்டும் படத்தில் நடிப்பதை பற்றி தற்போது யோசித்து வருவதாகவும் விரைவில் அவரை படங்களில் பார்க்கலாம் என உறுதி அளித்து உள்ளார் சக்தி.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.