அரோரா, கலை, பார்வதி.. இந்த வாரம் வெளியேற போவது யார்?

பிக் பாஸ் தமிழ் சீசன் 9-ன் நாற்பட்டவது வாரம், சஸ்பென்ஸ் மற்றும் எமோஷனால் நிரம்பியது. கமருதீன், வினோத், VJ பார்வதி காப்பாற்றப்பட்டாலும், ஆரோரா மற்றும் கலை இடையேயான போட்டி, ரசிகர்களை டென்ஷனில் ஆழ்த்தியுள்ளது.
 பிக் பாஸ் தமிழ் சீசன் 9 தற்போது தனது நான்காவது வாரத்தை எட்டியுள்ளது. ஆரம்பத்தில் 18 பேர் போட்டியாளர்களாக நுழைந்த இந்த நிகழ்ச்சி தற்போது பல திருப்பங்களுடன் முன்னேறி வருகிறது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த சீசன், ஒவ்வொரு வாரமும் புதுப்புது சர்ச்சைகள், உணர்ச்சி மிகுந்த தருணங்கள் மற்றும் பிரபலங்களின் உண்மை முகங்களை வெளிக்கொணர்கிறது. அதேசமயம், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து விவாதித்து வரும் முக்கிய விஷயம் “இந்த வாரம் யார் எலிமினேட் ஆகப் போகிறார்?”  என்பதே.
இந்த வார நாமினேஷனில் ஐந்து போட்டியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். கமருதீன், VJ பார்வதி, கலை, அரோரா சின்க்லேர் மற்றும் வினோத். இவர்கள் அனைவரும் கடந்த வாரத்தின் டாஸ்க், வீட்டுக்குள் நடந்த வாக்குவாதங்கள் மற்றும் தனிப்பட்ட செய்கைகளின் அடிப்படையில் மற்ற போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்த ஐந்து பேரில் ஒவ்வொருவருக்கும் ரசிகர்கள் தரப்பில் வலுவான ஆதரவு இருந்தாலும், சிலரின் நடத்தை காரணமாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இந்த வார வாக்குப்பதிவில் மிக அதிக வாக்குகளை பெற்றவர் கமருதீன். ஆரம்பத்தில் அமைதியான போட்டியாளராக இருந்த அவர், தற்போது தனது நகைச்சுவை உணர்வும், நேர்மையான அணுகுமுறையும் காரணமாக வீட்டுக்குள் ஒரு முக்கியமான இடத்தை பிடித்துள்ளார். அவர் இந்த வார எலிமினேஷனில் முதலாவதாக பாதுகாப்பான இடத்தை பெற்றுள்ளார்.
இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை முறையே வினோத் மற்றும் VJ பார்வதி பெற்றுள்ளனர். வினோத் தனது நேர்மையான பேச்சு, திறமையான விளையாட்டு மற்றும் கேம் புரிதலால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். மற்றபக்கம், பார்வதி வீட்டுக்குள் பலருக்கு ஆதரவாகவும் சில சமயம் எதிராகவும் பேசும் நேர்மையான குணத்தால் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளார். இவர்களிருவரும் தற்போது "safe zone" பகுதியில் இருப்பதாக சொல்லலாம்.
அரோரா பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்ததிலிருந்தே பெரும் சர்ச்சைகளை கிளப்பி வருகிறார். தன்னுடைய வெளிப்படையான பேச்சு, உணர்ச்சிமிக்க செய்கைகள் மற்றும் சில சமயங்களில் வெளிப்படும் கோபம் காரணமாக ரசிகர்களிடையே கலவையான எதிர்வினைகள் எழுந்துள்ளன. இந்த வார வாக்குப்பதிவில் அவர் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். இது அவருக்கு ஒரு எச்சரிக்கை சிக்னலாகும் அடுத்த வாரங்களில் அவர் தனது கேம் ஸ்ட்ராட்டஜியை மாற்றாவிட்டால் வெளியேற வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.
இந்த வாரத்தில் குறைந்த வாக்குகளை பெற்றவர் கலை. கடந்த சில வாரங்களாக அவரின் பங்களிப்பு குறைவாக இருந்தது, இதனால் ரசிகர்கள் அவருக்கு பெரும் ஆதரவு வழங்கவில்லை. பிக் பாஸ் வீட்டுக்குள் கலை பலருடன் நெருக்கமாக பழகியிருந்தாலும், கேம் பற்றிய தன்னுடைய வெளிப்படையான கருத்துகளை குறைவாக பகிர்ந்துள்ளார். இதுவே அவரை ரசிகர்கள் மனதில் “பாசிட்டிவ் இம்ப்ரஷன்” கொடுக்காமல் வைத்திருக்கலாம். எனவே, இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற அதிக வாய்ப்புள்ளவர் கலை என்பதே ரசிகர்கள் கருத்து.
நான்காவது வார நாமினேஷன் முடிவுகள் ரசிகர்களை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. கமருதீன், வினோத் மற்றும் பார்வதி தற்போது பாதுகாப்பான நிலையில் இருப்பினும், அரோரா மற்றும் கலை ஆகியோருக்கிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த வாரம் யார் எலிமினேட் ஆகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பிக் பாஸ் தமிழ் சீசன் 9 தற்போது OTT மற்றும் தொலைக்காட்சி இரண்டிலும் மிகுந்த ரேட்டிங் பெற்று வருகிறது. அடுத்த வாரம் புதிய டாஸ்க் மற்றும் டிராமாக்களுடன் நிகழ்ச்சி இன்னும் சுவாரஸ்யமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

