ஃபைனலுக்கு தயாராகும் பிக்பாஸ் போட்டியாளர்கள்.. குவியும் வாக்குகள், இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார்.?
Biggboss 8: பிக்பாஸ் வீட்டுக்குள் இப்போது பழைய போட்டியாளர்கள் வந்திருக்கின்றனர். அதன்படி வர்ஷினி, சுனிதா, ரவீந்திரன், சிவகுமார், ரியா, அர்ணவ் என ஒவ்வொருவராக என்ட்ரி கொடுக்கின்றனர்.
இதில் சுனிதா ரியா உள்ளிட்டோர் முத்துக்குமரனிடம் அவருக்கு இருக்கும் ஆதரவை பற்றி இலை மறை காயாக பேசுகின்றனர். ஓட்டு பிரியக்கூடாது என்பதையும் நினைவுபடுத்துகின்றனர்.
அதே சமயம் வீட்டுக்குள் வந்த அர்ணவ் பழைய வன்மத்தை எல்லாம் கொட்டுகிறார். இதை ஏற்கனவே எட்டு போட்டியாளர்களும் எதிர்பார்த்து தான் இருந்தனர்.
அதனால் இந்த விஷயத்தில் ஒட்டுமொத்தமாக சேர்ந்து தங்கள் எதிர்ப்பை அவர்கள் காட்டியுள்ளனர். இதனால் இன்றைய எபிசோட் நிச்சயம் சுவாரசியமாகத்தான் இருக்கும்.
இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார்.?
அதேபோல் இந்த வாரம் ரயானை தவிர மீதி ஏழு பேரும் நாமினேஷனில் இருக்கின்றனர். அதில் வழக்கம் போல முத்து தான் அதிக வாக்குகளை கைப்பற்றியுள்ளார்.
அவருக்கு அடுத்ததாக சும்மா சௌந்தர்யா இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அடுத்தபடியாக ஜாக்லின் தீபக் அருண் ஆகியோர் உள்ளனர்.
இதில் கடைசி இரண்டு இடத்தில் விஷால் பவித்ரா இருக்கின்றனர். அதனால் இந்த வாரம் நடக்கப் போகின்ற மிட் வீக் எவிக்ஷனில் பவித்ரா வெளியேறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
இது அவருடைய ரசிகர்களுக்கு நிச்சயம் வருத்தமாக தான் இருக்கும். அதேபோல் தர்ஷிகா அன்சிதா வெளியேற்றத்திற்கு விஷால் காரணம் என்ற பேச்சு இப்போது உள்ளது.
இன்று வீட்டுக்குள் வந்த போட்டியாளர்கள் கூட இதைத்தான் கூறினார்கள். அதனால் அவர் இந்த வாரம் வெளியேறுவது ஆடியன்ஸ் எதிர்பார்த்தது தான். இப்படியாக இரண்டு பேர் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற உள்ளனர்.
