Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், சேரன் வேலைக்கு கிளம்பி கொண்டிருக்கும் பொழுது கார்த்திகா வீட்டிற்கு வருகிறார். கார்த்திகாவின் வருகையை எதிர்பார்க்காத சேரன் அதிர்ச்சியாகி நிற்கிறார். பிறகு இரண்டு பேரும் பேச ஆரம்பிக்கிறார்கள், அப்பொழுது நீ எப்படி வீட்டிற்கு தெரியாமல் இங்கே வந்தாய் என்று கேட்கிறார்.
அதற்கு கார்த்திகா நான் வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லி விட்டேன், என்னை கல்யாணம் பண்ணிக் கொண்டவரிடமும் மாமா வீட்டுக்கு போயிட்டு வருகிறேன் என்று சொல்லி தான் வந்தேன் என சொல்கிறார். பிறகு இன்று இரவு நாங்கள் என்னுடைய மாமனார் வீட்டுக்கு கிளம்புகிறோம். அதான் உங்களை பார்த்து பேச வந்தேன் என சொல்கிறார்.
அப்படி பேசிட்டு போகும் பொழுது சீக்கிரமா நீங்களும் கல்யாணம் பண்ணி சந்தோஷமாக வாழ வேண்டும் என கார்த்திகா, சேரனிடம் சொல்கிறார். அதற்கு சேரனும் சரி என்று சொல்லிவிடுகிறார். அதன் பிறகு கார்த்திகா நான் இன்று கிளம்பி விடுவேன், அதனால் என்னுடைய வீட்டுக்காரரை இங்கே கூட்டிட்டு வந்து உங்களை அறிமுகப்படுத்தலாமா என கேட்கிறார்.
உடனே சேரன், கூட்டிட்டு வாமா என்று சொல்லி விருந்து வைப்பதாகவும் சொல்லிவிடுகிறார். இதையெல்லாம் பார்த்த பல்லவன், பாண்டியன் மற்றும் சோழனுக்கு போன் பண்ணி தகவலை சொல்லி வீட்டிற்கு வர வைக்கிறார். பிறகு இவர்கள் வந்ததும் கார்த்திகா வந்து பேசியதற்கு சேரனிடம் கோபமாக கேட்கிறார்கள். ஆனால் சேரன் இதெல்லாம் பெருசு படுத்தாமல் கார்த்திகா மற்றும் வீட்டுக்காரர் விருந்துக்கு வரப்போவதை சொல்கிறார்.
இதை கேட்டதும் தம்பிகள் இன்னும் அதிகமாக கோபப்பட ஆரம்பித்து விட்டார்கள். பிறகு நிலா, சேரனுக்கு சப்போர்ட்டாக பேசுகிறார். உடனே அனைவரும் வாயை மூடி விடுகிறார்கள். கறி விருந்து சமைக்க வேண்டும் என்று சிக்கன் மட்டன் மீன் என்று அனைத்தையும் வாங்கிட்டு வந்து சேரன் சமைத்துக் கொண்டிருக்கும் பொழுது நிலா உதவியாக நிற்கிறார்.
இதையெல்லாம் பார்த்ததும் நடேசன் இன்னைக்கு என்ன விசேஷம் என்று கேட்க ஆரம்பித்தபோது சேரன், கார்த்திகா விருந்தை பற்றி சொல்கிறார். இதை கேட்டதும் நடேசன் உச்சகட்ட கோபத்திற்கு ஆளாகி சண்டை போடுகிறார். ஆனால் இதுவரை பொறுமையாக இருந்த சேரன் முதல் முறையாக கோபப்பட்டு பேசும் விதமாக அப்பாவிடம் சண்டை போட்டதும் நடேசன் அமைதியாகி விடுகிறார்.