சூடு பிடிக்கும் குக் வித் கோமாளி சீசன் 6.. பழைய கோமாளிகளை ஓரங்கட்டிய 3 புது கோமாளிகள்

Vijay Tv Cook with Comali 6: விஜய் டிவியில் வரும் நிகழ்ச்சிகளில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு எப்பொழுதுமே மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும். ஏனென்றால் வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த நிகழ்ச்சியை பார்த்து விட்டால் நம்மளுடைய மன அழுத்தம் எல்லாம் சரியாகிவிடும் என்பதுதான் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாக பார்க்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை துவங்கிய சீசன் 6 நிகழ்ச்சியில் சில புது கோமாளிகளும் 10 போட்டியாளர்களும் உள்ளே நுழைந்திருக்கிறார்கள். அந்த வகையில் வருகிற எபிசோடில் தமிழ்நாட்டில் இருக்கும் ஊர்களின் ஸ்பெஷாலிட்டியே சமைத்துக் கொடுப்பதுதான் மிகப்பெரிய டாஸ்காக கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் வழக்கம் போல் இதில் ஒரு சின்ன சூட்சமம் என்னவென்றால் சமைக்கும் போட்டியாளர்கள் முகத்தை முகமூடி போட்டு மூடிக்கொண்டு கோமாளிகளுக்கு சமைக்கும் டிப்ஸ்களை கொடுக்க வேண்டும். அந்த வகையில் சுந்தரி அக்காவுக்கு கோமாளியாக புகழ் வந்திருக்கிறார். தேனடை மதுமிதாக்கு குரேசி கோமாளியாக இருக்கிறார்.

இப்படி பத்து போட்டியாளர்களுக்கும் 10 கோமாளிகள் கொடுக்கப்பட்ட நிலையில் இந்த வார சீசன் சூடு பிடிக்கிறது என்று சொல்லும் அளவிற்கு மக்களிடமிருந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. அதிலும் பழைய கோமாளிகளாக இருக்கும் சுனிதா, சரத், ராமர் இவர்களை எல்லாம் விட புதுசாக வந்திருக்கும் சர்ச்சின், பூவையார், டோலி இவர்கள் வந்த ஒரு நாளிலேயே மக்கள் மனதில் இடம் எடுத்து விட்டார்கள்.

முக்கியமாக காமெடிக்கு காமெடியும் பண்ணி போட்டியாளர்களுக்கு உதவி பண்ணும் விதமாக புதுசாக வந்த மூன்று கோமாளிகள் களத்தில் இறங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் சுனிதாவின் செயல்கள் கொஞ்சம் எரிச்சல் படுத்தும் விதமாக இருப்பதாகவும் இவருக்கு பதிலாக இன்னும் புதுசாக ஒரு கோமாளியை கொண்டு வந்திருக்கலாம் என சுனிதாவுக்கு எதிராக கமெண்ட்ஸ் வருகிறது.

ஆரம்பித்த உடனே இந்த சீசன் மக்களை கவர்ந்ததால் இன்னும் போகப்போக விறுவிறுப்புக்கும், பஞ்சாயத்துக்கும் பஞ்சமே இல்லை என்று சொல்வதற்கு ஏற்ப நிகழ்ச்சி அட்டகாசமாக வெற்றி பெறப் போகிறது.