எதிர்நீச்சல் 2 சீரியலில் தர்ஷினி சொன்ன விஷயம், குணசேகரன் போட்ட பிளான்.. ஜனனிக்கு தெரிய வந்த உண்மை

Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், குணசேகரன் பிளான் பண்ணி அந்த வீட்டில் இருக்கும் பெண்களை அடிமைப்படுத்த வேண்டும் என்று காய் நகர்த்த ஆரம்பித்து விட்டார். அதற்கு ஏற்ற மாதிரி குணசேகரனுக்கு பக்க வாத்தியம் பாடி விசாலாட்சியும் வீட்டு மருமகளை டார்ச்சர் பண்ண ஆரம்பித்து விட்டார். அதன்படி ஜனனியே வேலைக்கு அனுப்பாமல் வீட்டிற்குள் வைக்க வேண்டும் என்பதற்காக விசாலாட்சி, ஜனனியை வேலை வாங்கினார்.

ஜனனியும் என்ன செய்வது என்று தெரியாமல் விசாலாட்சி விரித்த வலையில் சிக்கி விட்டார். அடுத்ததாக ஈஸ்வரியை தன்னுடைய கண்ட்ரோலுக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைத்த குணசேகரன் மறுபடியும் ஒரு ட்ராமாவை போட்டுவிட்டார். அதாவது குளிக்க போன இடத்தில் கையில் சுளுக்கு பிடித்ததாகவும் தண்ணீர் வரவில்லை என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்து ஈஸ்வரியை வேலை வாங்கி தன்னுடைய வேலைக்காரியாக குணசேகரன் கொண்டு வந்து விட்டார்.

ஆனால் ஜனனி மொட்டை மாடிக்கு சென்று தண்ணீர் தொட்டியை பார்க்கும் பொழுது அதில் எல்லா அடைப்புகளும் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. உடனே அங்கே வேலை பார்ப்பவர்களிடம் ஜனனி கேட்ட நிலையில் இதை எல்லாத்தையும் பெரியவர்தான் அடைத்து வைத்தார் என்ற உண்மையை சொல்லி விடுகிறார். அந்த நிமிஷமே ஜனனிக்கு தெரிந்து விட்டது இது எல்லாம் குணசேகரன் போட்ட பிளான் தான் என்று.

பிறகு வீட்டிற்கு சில விருந்தாளிகளை வரச் சொல்லி பெண்களை சமைக்க சொல்லி வேற எந்த வேலையும் பார்க்காமல் குணசேகரன் மற்றும் விசாலாட்சி ஆர்டர் போட்டு விடுகிறார்கள். அத்துடன் ஜனனியையும் உதவி செய்யும் படி சொல்லி பெண்கள் அடுப்பாங்கரையில் வேலை பார்ப்பதற்கு தான் லாக்கி என்பதை நிரூபித்து காட்டும்படி ஆட்சி செய்கிறார்கள்.

இதையெல்லாம் பார்த்த ஜனனிக்கு குணசேகரின் பிளான் புரிந்து விட்டது. அத்துடன் மற்ற பெண்களுக்கும் இதெல்லாம் வேண்டுமென்றே பண்ணுகிறார்கள் என்பதும் தெரிந்து விட்டது. ஆனாலும் அமைதியாக இருக்கும் ஜனனி, குணசேகரன் வழியிலேயே சென்று அவருக்கு திருப்பி பதிலடி கொடுக்கப் போகிறார். ஆனால் இப்படித்தான் நடக்கும் என்று தர்ஷினி ஏற்கனவே சொல்லி கோபப்பட்டு இந்த வீட்டை விட்டு போயிருக்கிறார்.

அதன்படி தான் தற்போது நான்கு பெண்களும் வீட்டில் வேலை பார்ப்பது போல் அமைந்து வருகிறது. இருந்தாலும் ஜனனி இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக குணசேகரன் ஆட்டம் களறப்போகிறது. மேலும் பரோலில் வந்திருக்கும் குணசேகரன் ஏன் இன்னும் வீட்டில் இருந்து அதிகாரம் பண்ணுகிறார், கல்யாணம் டிராக் என்னாச்சு, நந்தினியின் பிசினஸ், ரேணுகாவின் நடனம் போன்ற எல்லா விஷயங்களும் கேள்விக்குறியாக இருக்கிறது.

இந்த சூழலையில் எதிர்நீச்சல் ஆரம்பித்த முதல் எபிசோடில் என்ன காட்சிகள் நடந்ததோ அதை தான் மறுபடியும் கொண்டு வந்து பார்ப்பவர்களை எரிச்சல் படுத்தும் விதமாகத்தான் இயக்குனர் கதையை கொண்டு வருகிறார். இதனால் தான் டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.