பாண்டியன் எடுத்த அவசர முடிவுக்கு எதிர்ப்பு கொடி காட்டும் மருமகள்.. மீனா கொடுத்த ஐடியா, ஆட்டத்தை குழப்பம் சுகன்யா

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், அரசி குமரவேலு காதல் வீட்டிற்கு தெரிந்த நிலையில் பாண்டியன் அரசியை சீக்கிரமாக கல்யாணம் பண்ணி கொடுத்து விட வேண்டும் என்று முடிவு பண்ணி விட்டார். அந்த வகையில் அக்கா மகன் சதீஷை வீட்டிற்கு பொண்ணு பார்க்க குடும்பத்துடன் வர வைத்து விட்டார்.

அரசியும் தன்மீது ஒரு தப்பு இருக்கிறது என்பதற்காக எதுவும் சொல்ல முடியாமல் மாப்பிள்ளை குடும்பத்தின் முன் ரெடி ஆகி வந்து விட்டார். ஆனால் இதை எப்படியாவது குழப்பி விட வேண்டும் என்ற நோக்கத்தில் சுகன்யா, அரசியை தனியாக பார்த்து பேசி இந்த பொண்ணு பார்க்கும் விஷயத்தை தடுத்துவிட வேண்டும் என்று முயற்சி எடுக்கிறார்.

ஆனால் சுகன்யாவின் திட்டத்தை புரிந்து கொண்ட மீனா மற்றும் ராஜி, அரசி இடம் சுகன்யாவை சந்தித்து பேச வைக்க கூடாது என்பதற்காக தடையாக இருந்தார்கள். அதனால் சுகன்யா நினைத்தபடி எதுவும் பேச முடியாமல் போய்விட்டது. அடுத்ததாக சதீஷ் குடும்பத்தில் இருப்பவர்கள் வந்த நிலையில் அனைவரும் ஒட்டுமொத்தமாக பொண்ணு பார்க்கும் விஷயத்திற்கு தயாராகி விட்டார்கள்.

உடனே அரசியை அலங்காரம் பண்ணி கூட்டிட்டு வந்து விட்டார்கள். அதன் பின் சதீஷ், நான் அரசிடம் தனியாக பார்த்து பேச வேண்டும் என்று கூப்பிட்டு பேச முயற்சி எடுக்கிறார். ஆனால் மீனாவும் கூடவே இருந்ததால் மாப்பிள்ளை கல்யாணத்துக்கு அப்புறம் அரசியை துபாய்க்கு கூட்டிட்டு போகிற விஷயத்தைப் பற்றி சொல்கிறார். இதை கேட்டதும் மீனா மற்றும் அரசி அதிர்ச்சி ஆகிவிட்டார்கள்.

இருந்தாலும் சதீஷ் பேச வேண்டிய விஷயத்தை பேசி முடித்துவிட்டு பொண்ணு எனக்கு பிடித்திருக்கிறது என்று எல்லோரும் முன்னாடியும் சொல்லிவிட்டார். அரசியும் வீட்டில் என்ன சொன்னாலும் எனக்கு ஓகே என்று பதில் கொடுத்து விடுகிறார். பிறகு பொண்ணு பார்க்கும் விஷயம் நிச்சயதார்த்தமாக மாறிவிட்டது. அது மட்டுமில்லாமல் ஒரு சில நாட்களிலே கல்யாணம் என்ற விஷயத்தை பேசி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துவிட்டார் பாண்டியன் மற்றும் அவருடைய அக்கா.

இது எப்படி சாத்தியமாகும் என்பதால் மீனா ராஜி, அரசி இன்னும் படித்து முடிக்க வேண்டும். அதற்குள் கல்யாணமா? என்று கேட்கிறார். அதற்கு கோமதி இப்போதைக்கு எதுவும் பேச வேண்டாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி நிச்சயதார்த்தத்தை நடத்தி முடித்து விடுகிறார்கள். ஆனாலும் அரசிக்கு இது பிடிக்குதா இல்லையா என்பது தெரியாமல் மீனா ராஜி மற்றும் தங்கமயில் அனைவரும் அரசிடம் பேச போகிறார்கள்.

அதற்கு அரசி நான் பண்ண தப்புக்கு இது ஒரு தண்டனையாக எடுத்துக் கொள்கிறேன். இதைப் பற்றி மறுபடியும் பேச வேண்டாம் என்று சொல்லி முடிக்கிறார். இருந்தாலும் சதிஷ் இடம் பேசி கொஞ்சம் அவர் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று மீனா சொன்ன நிலையில் ராஜி, கதிரிடம் பேசி எப்படியாவது சதீஷ் நம்பரை வாங்கி விடுகிறேன். அதன்பிறகு நடப்பதை நாம் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள்.

அந்த வகையில் பாண்டியன், நிச்சயதார்த்தம் மற்றும் கல்யாணம் என்று போகும்பொழுது மருமகள் புதுசாக குட்டையை குழப்பம் விதமாக முயற்சி எடுக்கிறார்கள். இதுல வேற சுகன்யா, இடையில் புகுந்த ஆட்டத்தை கலைத்து குமரவேலுடன் அரசியை சேர்த்து வைக்க வேண்டும் என்று சக்திவேலுடன் சதி திட்டம் போடுகிறார்.

1 thought on “பாண்டியன் எடுத்த அவசர முடிவுக்கு எதிர்ப்பு கொடி காட்டும் மருமகள்.. மீனா கொடுத்த ஐடியா, ஆட்டத்தை குழப்பம் சுகன்யா”

Leave a Comment