விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் நேற்று தரமான சம்பவங்கள் அரங்கேறியது. அதாவது கடந்த இரண்டு வாரங்களாக தனலட்சுமி ரசிகர்களுக்கு எரிச்சல் ஊட்டும் விதமாக சில செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். இதனால் நாளுக்கு நாள் ரசிகர்களுக்கு அவர் மீது அவப்பெயர் வருகிறது.
கடந்த வாரம் ஸ்வீட் ஃபேக்டரி டாஸ்க் வைக்கப்பட்டது. இதில் ஒரு அணியின் தலைவராக விக்ரமனும், மற்றொரு அணியின் தலைவராக தனலட்சுமியும் இருந்தனர். இந்த போட்டியில் பல பேர் இடையே சண்டை ஏற்பட்டு சுவாரசியமாக சென்று கொண்டிருந்தது. கடைசியில் அதிக பணத்தை சம்பாதித்ததால் தனலட்சுமி அணி வெற்றி பெற்றது.
மேலும் அணி தலைவரான தனலட்சுமிக்கு அடுத்த வார நாமினேஷனில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று கமல்ஹாசன் இந்த தீர்ப்பை மாற்றி அமைத்தார். அதாவது பிக் பாஸ் விதிப்படி பணத்தை கல்லா பெட்டியில் தான் வைக்க வேண்டும்.
அதை யாரும் திருடாதவாறு பாதுகாத்து இருக்க வேண்டும். ஆனால் தனலட்சுமி பணத்தை கல்லாப்பெட்டியில் வைக்காமல் தினமும் தலையணையில் மறைத்து வைத்துள்ளார். இதுதான் வெளியிலும் நடக்கிறது. அதாவது இதே போல் வெளியிலும் பணம் சுருட்டல் இருப்பதாக எடுத்துக்காட்டுடன் ஆண்டவர் கூறினார்.
இதற்கு ரசிகர்கள் மத்தியில் கைதட்டல் கிடைத்தது. இந்நிலையில் தனலட்சுமி வெற்றி பறிக்கப்பட்டு நியாயமாக விளையாண்ட விக்ரமனுக்கு வெற்றி கொடுக்கப்பட்டது. மேலும் அடுத்த வாரம் நாமினேஷனில் இருந்து விக்ரமனுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
ஆகையால் தனலட்சுமி பாத்ரூமில் சென்று கதறி அழுதார். ஆயிஷா அவருக்கு ஆறுதல் கூறியும் அதை ஏற்க தனலட்சுமி மறுத்துவிட்டார். தனலட்சுமியின் நடவடிக்கை மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் அடுத்த வாரம் அவர் வெளியில் போவது உறுதி என பலரும் கூறி வருகிறார்கள்.