எதிர்நீச்சல் நடிகை செய்த கின்னஸ் சாதனை தெரியுமா?

சன் டிவியின் ஹிட் லைன்-அப் லிஸ்ட்ல தெறிக்க வைத்திருக்கும் எதிர்நீச்சல் சீரியலின் ‘தர்ஷினி’யா நம்மை கவர்ந்தவர் தான் மோனிஷா விஜய்!
சின்ன வயசுலயே ஸ்கிரீன்ல எண்ட்ரி கொடுத்த இவர், இப்போ தமிழ்க் குடும்ப ரசிகர்களோட ஹார்ட்டுல ஸ்ட்ராங்கா செட்டாயிட்டார்.

சென்னையை சேர்ந்த இவர் மூன்று வயதிலேயே மேடைப் பேச்சு, விளம்பரங்களில் நடிப்பு என தன் திறமையை வெளிப்படுத்தியவர். ஓடி விளையாடு பாப்பா, ஜோடி நம்பர் ஒன், ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷினியாக நடித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார்.

நடிப்பு துறையில் மட்டுமல்ல, விளையாட்டிலும் இவர் ஒரு நிபுணர்.

சிலம்பம், ஜிம்னாஸ்டிக்ஸ், ஸ்கேட்டிங், குத்துசண்டை, குதிரை சவாரி என பலருக்கும் தெரியாத திறன்கள் உள்ளவர். சிலம்பத்தில் இந்தியா சார்பாக உலக போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்றுள்ளார்.

தன் சகோதரியுடன் சேர்ந்து இந்தியாவின் முதல் கின்னஸ் சாதனை கொண்ட சகோதரிகள் பட்டம் பெற்றவர். மொத்தம் 130 க்கும் மேற்பட்ட பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் அவரிடம் உள்ளன. இவை அனைத்தும் அவரது கடின உழைப்பையும், நேர்த்தியையும் காட்டுகின்றன.

மோனிஷா “City Lights” என்ற கன்னட படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. மோனிஷா விஜய் ஒரு பல்துறை திறமை வாய்ந்த இளம் நட்சத்திரம்.

Guinness-record-ethir-neechal-actress-dharshini
Guinness-record-ethir-neechal-actress-dharshini

விளையாட்டு, கலை, மற்றும் சீரியல் உலகில் பசுமை பதக்கம் பெற்றவர். எதிர்காலத்தில் தமிழ் சினிமாவிலும் அவரின் பயணம் தொடர வாழ்த்துக்கள்!