Ethirneechal Jeevandham: எத்தனையோ சீரியல்கள் போட்டி போட்டுக்கொண்டு ஒளிபரப்பாகி வந்தாலும் தற்போது எல்லாத்தையும் அடித்து நொறுக்கி முதல் இடத்தை பிடித்திருப்பது சன் டிவியில் உள்ள எதிர்நீச்சல் சீரியல் தான். அதற்கு காரணம் இந்த நாடகத்தில் உள்ள கதை, வசனம் மற்றும் கதாபாத்திரங்களாக நடிக்கக்கூடிய ஆர்டிஸ்ட்கள். முக்கியமாக இந்த நாடகத்தில் புரட்சிகரமாக பல விஷயங்களை காட்டப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த நாடகத்தின் இயக்குனர் திருச்செல்வம் அவர்களுக்கு பல பாராட்டுக்கள் குவிந்து கொண்டே வருகிறது. ஆனால் இவர் வெறும் நாடகத்திற்காக மட்டும் புரட்சியை ஏற்படுத்தும் விதமாக இல்லாமல், நிஜ வாழ்க்கையிலும் இவருடைய கேரக்டர் இதுவாகத்தான் அமைகிறது. அதற்கு உதாரணமாக இதுவரை எந்த நாடகத்திலும் செய்யாத ஒரு செயலை முன்னிறுத்தி காட்டி இருக்கிறார்.
இந்த மாற்றத்தை வைத்து மொத்த சமுதாயத்திற்கும் ஒரு விடியலை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் இவருடைய நோக்கமாக இருக்கிறது. அதாவது சீரியல் ஆர்டிஸ்ட்கள் எந்த மாதிரியான வகையை சேர்ந்திருந்தாலும் நாடகத்தில் நடிக்கும் பொழுது அதற்கு ஏற்ற மாதிரி அவர்களை மாற்றிக்கொண்டு நடிக்க வைப்பது தான் எல்லா இயக்குனர்களின் முக்கிய பங்காக இருக்கும். ஆனால் இவர் இதில் ரொம்பவே விதிவிலக்காக இருக்கிறார்.
அதற்கு காரணம் இந்த நாடகத்தில் ஜீவானந்தம் என்ற கேரக்டருக்கு அசிஸ்டெண்டாக பர்கானா நடித்து வருகிறார். ஆனால் இவர் நடிப்பதற்கு முன் இயக்குனரிடம் போட்ட கண்டிஷன் எந்த காரணத்தை கொண்டும் என்னுடைய ஹிஜாபை நான் கழட்ட மாட்டேன் என்பதுதான். இவர் சொன்னதும் இயக்குனர் திருச்செல்வம் அவர்களும் ஒத்துக்கொண்டு அதற்கேற்ற மாதிரியே கதையை அமைத்துக் கொண்டார்.
இது ஒரு விதத்தில் பாராட்டக்கூடியதாக இருந்தாலும், தொடர்ந்து பர்கானா என்பவர் அளிக்கும் பேட்டியில் இதை அழுத்தி அடிக்கடி சொல்வது யாரோ இவர் பின்னணியில் இருந்து இந்த மாதிரி தூண்டி விடுகிறார்கள் என்பது போல் தெரிகிறது. அதுவும் இடையில் தான் இந்த பெண்ணிற்கு ஹிஜாப் போடுகிற பழக்கமே வந்திருக்கிறதாம். அப்படிப்பட்ட பெண் இந்த நாடகத்தில் இதே மாதிரி தான் இருப்பேன் என்று பிடிவாதமாக சொல்லி நடிப்பதை பார்க்கும் பொழுது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது.
அதாவது இந்த பர்கானா பேட்டி அளிப்பதற்கு முன் எந்த ஒரு விஷயமும் யார் மனதிற்குள்ளும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் இவர் பேசியதிலிருந்து ஏதோ ஒரு உள்நோக்கம் இருப்பது போல் தெரிகிறது. என்று பல சர்ச்சைகள் வெடிக்கும் அளவிற்கு இவருடைய பேட்டி இருப்பதாக பலரும் அவர்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.