பார்கவியை விடாமல் துரத்தும் குணசேகரனின் மருமகள்.. ஏழரையை விலை கொடுத்து வாங்கும் ஜனனி

Ethirneechal Serial 2: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், உங்க சகவாசமே வேண்டாம் என்று பார்கவி கனடா போவதற்கு தயாராகிவிட்டார். பார்கவி ஆசைப்பட்ட மாதிரி மேல்படிப்பு படித்து வெற்றி பெற வேண்டும் என்று ஜீவானந்தமும் பார்கவிக்கு தேவையான உதவிகளை செய்து அனுப்பி வைப்பதற்கு முயற்சி எடுக்கிறார்.

அந்த வகையில் இவர்களுடைய சிம் கார்டு மூலம் ஜனனி கண்டுபிடித்து விடுவார் என்பதற்காக இருவரும் சிம்கார்டை உடைத்து விட்டார்கள். மேலும் ஜீவானந்தம், பார்க்கவியை கூட்டிட்டு கும்பகோணம் சென்று வாத்தியாருக்கு செய்ய வேண்டிய சடங்கு சம்பிரதாயங்களையும் செய்யச் சொல்லி அங்க இருந்து பார்க்கவியை அனுப்பி வைப்பதற்கு தயாராகி இருக்கிறார்.

இது எதுவும் தெரியாத ஜனனி, எப்படியாவது ஜீவானந்தம் பார்க்கவியை கண்டுபிடித்து தர்ஷனுக்கும் பார்க்கவிக்கும் கல்யாணத்தை பண்ணி வைக்க வேண்டும் என்று நினைக்கிறார். அதனால் ஜீவானந்தத்தை கண்டுபிடிப்பதற்கு பல வழிகளில் முயற்சி எடுக்கிறார். அப்பொழுது ஜனனி, டிவியில் ஒரு நிகழ்ச்சியை பார்க்கும் பொழுது ஜீவானந்தம் பார்கவி கும்பகோணத்தில் இருப்பதை தெரிந்து கொண்டார்.

உடனே ஜனனி, ஈஸ்வரிக்கு போன் பண்ணி ஜீவானந்தம் இருக்கும் இடம் தெரிந்து விட்டது. நான் எப்படியாவது பார்க்கவியை கூட்டிட்டு வந்து விடுவேன். நீங்கள் தர்ஷனுக்கும் பார்கவிக்கும் கல்யாணம் பண்ணி வைப்பதற்கு ஏற்பாடுகளை பண்ணுங்க என்று சொல்லிவிடுகிறார். இந்த ஜனனிக்கு எப்போதுமே மற்றவர்கள் பிரச்சனையில் மூக்கை நுழைப்பதை மட்டும் இல்லாமல் அவர்களை சிக்கலில் மாட்டி விடுவதும் வேலையாக வைத்து வருகிறார்.

இந்த அறிவுகரசி குணசேகரன் இடம் இருந்து பார்கவி கண்காணாத இடத்தில் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று தான் ஜீவானந்தம் இப்படி ஒரு முடிவை எடுத்தார். ஆனால் இதை கெடுக்கும் விதமாக குணசேகரன் விட்டு மருமகள்கள், பார்க்கவிக்கு கல்யாணத்தை பண்ணி வைத்து குணசேகரன் வீட்டு அடிமையாக ஆவதற்கு வழி பண்ணுகிறார்கள்.

புத்தி கெட்டு போய் தெரியும் தர்ஷன் மூலம் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்த பிறகும் திருந்தாத மருமகள்கள் தொடர்ந்து ஏழரையை இழுத்துக் கொண்டே வருகிறார்கள். இதற்கு குணசேகரனும் அறிவுகரசியும் இன்னும் என்னெல்லாம் செய்ய காத்துக் கொண்டிருக்கிறார்களோ? பொறுத்திருந்து பார்க்கலாம்.