Ethirneechal: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் பல மாதங்களுக்குப் பிறகு இப்பொழுது தான் பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கிறது. அதற்கு காரணம் ஜனனி பக்காவாக பிளான் போட்டு குணசேகரனின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்று வலை விரித்தாரோ அதில் வசமாக சிக்கிக்கொண்டார். அதாவது அப்பத்தாவின் இறப்பில் ஒரு மர்மம் இருக்கிறது அதை கண்டுபிடிக்கும் மாதிரி மறுவிசாரணைக்கு தாக்கல் பண்ணி இருந்தார்.
இதனை தொடர்ந்து அதை விசாரிப்பதற்காக குணசேகரன், கதிர், ஞானம் மற்றும் கரிகாலன் அனைவரையும் போலீசார் கூட்டிட்டு போகிறார்கள். போகும்போது எனக்கு எதிராக எலக்ஷனில் சாருபாலாவை நிற்க வைத்து, இங்கு எனக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பதற்கு அவரையே வாதாட வைத்திருக்கிறாயா என்று சொல்லி ஜனனி மீது கோபத்துடன் போகிறார்.
இருந்தாலும் இனி இவருடைய கோபம் எல்லாம் வெறும் வெத்து வெட்டு என்று சொல்லும் அளவிற்கு அடுத்தடுத்து குணசேகரன் மாட்டப் போகிறார். இனி எலக்சன் விஷயத்தில் ஈஸ்வரி ஜெயித்து குணசேகரனை செல்லா காசாக ஆக்கப் போகிறார். அதே மாதிரி அப்பத்தாவின் இறப்பிற்கு குணசேகரன் காரணம் என்கிற உண்மையையும் தெரிந்துவிடும்.
அதனால் அதற்கு ஏற்ற மாதிரி தக்க தண்டனை இவருக்கு கிடைக்கப்போகுது. அடுத்தபடியாக ஆதிரை விஷயத்தில் ஜான்சி ராணி தேவையில்லாமல் மூக்கை நுழைத்ததால் கோபத்தில் கரிகாலன் கட்டின தாலியை கழட்டி விடுகிறார். இதனால் ஜான்சிராணி ஆதிரையை துன்புறுத்துகிறார். இதை பார்த்துக் கொண்டிருந்த ஈஸ்வரி எங்க வீட்டு பொண்ணு மேலே நீ கை வைப்பியா என்று பளார் என்று ஓங்கி அடிக்கிறார்.
அத்துடன் மற்ற மருமகள்களும் ஜான்சி ராணியை வெளுத்து வாங்கும் அளவிற்கு ஓட ஓட விரட்டி வீட்டை விட்டு வெளிய அனுப்பி விடுகிறார்கள். ஒரு வழியாக ஆதிரைக்கு விடிவுகாலம் பிறந்துவிடும் வகையில் கரிகாலன் மற்றும் ஜான்சி ராணிக்கு முடிவு கட்டியாச்சு. இனி அடுத்தடுத்து ஜனனி ஆடப்போகும் ஆட்டம் தான் ருத்ர தாண்டவமாக இருக்கப்போகிறது.
அத்துடன் சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்பதற்கு ஏற்ப ஈஸ்வரி தனக்கு கிடைத்த ஒரு சான்சை சரியாக பயன்படுத்தி குணசேகரன் மூஞ்சியில் கரிய பூச போகிறார். பெண்கள் நினைத்தால் எதையும் செய்ய முடியும், எந்த எல்லைக்கும் போகவும் தயங்க மாட்டார்கள் என்பதற்கேற்ப இனி அந்த வீட்டில் உள்ள நான்கு மருமகள்களின் ஆட்டம் ஆரம்பமாக போகிறது.