எதிர்நீச்சல் 2 சீரியலில் ஜனனிக்கு உயிர் பயத்தை காட்டிய கதிர், ஜெயிலுக்கு போகும் குணசேகரன்.. காப்பாற்றிய குற்றவை

Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், பரோலில் வெளியே வந்த குணசேகரன் என்ன கண்டிஷனில் வந்திருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். அதிலும் குணசேகரனுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் அந்த வகையில் வீட்டின் பெண்களுக்கு ஆபத்து வரும் வகையில் எதுவும் பண்ண வாய்ப்பு இருக்காது.

ஆனாலும் விசாலாட்சி விஷம் குடித்து விட்டார் என்ற விஷயத்தைக் கேள்விப்பட்டு வீட்டிற்கு வந்த மருமகள்களில் ஜனனிக்கு மட்டும் தொடர்ந்து விபரீதம் ஏற்பட்டு வருகிறது. வீட்டில் வைத்திருந்த ஃபோன் எப்படி வெளியே முடுக்கில் இருந்தது என்று தெரியவில்லை.

அங்கே ஜனனி வரும் அந்த நேரத்தில் மொட்ட மாடியில் இருந்து பூத்தொட்டி கீழே விழுந்து ஜனனி காலில் அடிபட்டுவிட்டது. அடுத்ததாக பரிகாரம் செய்வதற்கு அனைவரும் கோவிலுக்கு போன நிலையில் ஏசி ரூம்குள் மாட்டிக்கொண்டு வெளியே வராதபடி ரூம் கதவு அடைக்கப்பட்டு ஜனனி சித்திரவதை அனுபவித்தார்.

இந்த அளவுக்கு குணசேகரன் யோசித்து ஜனனியே பழிவாங்கி இருந்தால் நிச்சயம் நம்முடைய பரோல் கேன்சல் ஆகிவிடும் என்று அவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். அதனால் குணசேகரன் ஜனனியை இந்த மாதிரி பண்ணுவதற்கு வாய்ப்பு இல்லை. இதற்கு பதிலாக குணசேகரனை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் கதிர் தான் இதற்குப் பின்னணியில் இருப்பார்.

இரண்டு முறை ஜனனி ஆபத்தை நெருங்கியதற்கு கதிர் தான் காரணம். கதிர் விரித்த வலையில் குணசேகரன் சிக்கிக்கொண்டார். அதன்படி ஜனனிக்கு தன்னுடைய உயிருக்கு குணசேகரன் மூலம் ஆபத்து இருக்கிறது எனப் புரிந்து கொண்ட பின் குற்றவைக்கு தகவலை கொடுக்கிறார்.

உடனே குற்றவை, ஜனனியை காப்பாற்றும் விதமாக வந்து குணசேகரனின் பரோலை கேன்சல் பண்ணிவிட்டு ஜெயிலுக்கு கூட்டிட்டு போய்விடுகிறார். இதனால் கதிர் எதிர்பார்த்தபடி குணசேகரனை ஜெயிலுக்கு அனுப்பி விட்டாச்சு மறுபடியும் கதிர் கைக்கு எல்லா அதிகாரமும் வந்துவிடும்.