வன்மத்தை தீர்த்துக் கொள்ளும் குணசேகரன் தங்கச்சி.. ஆடுபுலி ஆட்டம் ஆடும் அப்பத்தா

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், கதையை நாலா பக்கமும் திசை திருப்பி சுவாரசியமாக கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் நாச்சியப்பன் குடும்பத்தை வைத்து ஜனனிக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று மெய்யப்பன் குடும்பத்தில் உள்ளவர்கள் யோசிக்கிறார்கள். அதற்காக ஜனனிடமிருந்து அபகரித்த கம்பெனியை நாச்சியப்பன் பெயரில் மாற்றப் போகிறார்கள்.

அப்படி மாற்றிவிட்டால் அப்பாவை எதிர்த்து ஜனனியால் எதுவுமே பண்ண முடியாது என்று நினைக்கிறார்கள். இது புரியாமல் நாச்சியப்பன் இவர்களிடமிருந்து எப்படியாவது சொத்தை பிடுங்கி ஜனனிக்கு சேர்த்து விடனும் என்று நினைக்கிறார். இதற்கிடையில் பாவம் மாட்டிக்கொண்டு முழிக்கிறது ஜனனியின் அம்மா. தன்னுடைய கணவர் இந்த அளவுக்கு மோசமாக இருக்கிறார் என்று மொத்தமாகவே நிலைகுலைந்து போய்விட்டார்.

அதன் பின் மாமியாரை வீட்டிற்கு கூட்டிட்டு வந்த சக்தி, அம்மாவின் வாயை மூடும் அளவிற்கு பதிலடி கொடுத்து விட்டார். இதனை தொடர்ந்து ஜனனி வீட்டில் தான் அவருடைய அம்மா தங்குகிறார். அடுத்தப்படியாக அனைவரும் சேர்ந்து கவலையுடன் இருக்கும் பொழுது சக்தி, இப்படி அழுதுகிட்டே இருப்பதினால் ஒரு பிரயோஜனமும் இல்லை. தயவு செய்து இந்த மாதிரி ஒரு விஷயத்தில் இருந்து வெளியில வாங்க என்று ஆவேசமாக பொங்கி எழுகிறார்.

அடுத்தபடியாக ஆதிரை அவருக்கு நடந்த அநியாயத்திற்கு முறைப்படி நியாயம் வேண்டும் என்பதற்காக சாருபாலா மூலம் அவருடைய வன்மத்தை தீர்த்துக் கொள்ள நினைக்கிறார். அதற்காக குணசேகரன், கதிர் மற்றும் ஞானம் இவர்கள் 3 பேர் மீதும் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் ஆதிரைக்கு நடந்த கல்யாணம் செல்லுபடி ஆகாது என்று உத்தரவு வரப்போகிறது.

இதற்கு இடையில் குணசேகரனின் அப்பத்தா பெண்களின் சுய கௌரவத்திற்கும், விடாமுயற்சிக்கும் ரொம்பவே மோட்டிவேஷனாக இருந்தார். அப்படிப்பட்டவர் இறப்பிற்கு பின் ஜனனியின் அப்பத்தாவாக வந்திருப்பவர் இதற்கு எதிர் மாறாக பணம்தான் எல்லாமே, பெண்கள் எப்போதுமே அடிமைதான் என்று சொல்லும் அளவிற்கு ஒரு நெகட்டிவ் கேரக்டரில் இருக்கிறார்.

அத்துடன் வந்த வேகத்திலேயே ஜனனி அம்மாவிடமிருந்து நாச்சியப்பனை பிரித்து விட்டார். அத்துடன் இவர் மூலம் இனி அந்த குடும்பத்திற்கு கொடுக்கப்படும் டார்ச்சர் தான் மிகப்பெரிய தண்டனை என்று பேரன்களிடம் சொல்கிறார். அந்த வகையில் தற்போது வருகிற எபிசோடில் ஒவ்வொருவரும் ஆடப்போகும் ஆடுபுலி ஆட்டத்தில் யாரு ஜெயிக்கப் போகிறார் என்பதுதான் மிக சுவாரசியமாக இருக்கப் போகிறது.