1. Home
  2. தொலைக்காட்சி

சிங்கப்பெண்ணில் அம்மா சம்மதித்தும் சேர முடியாத அன்பு-ஆனந்தி காதல்.. மகேசுக்காக எல்லை மீறிய வார்டன்!

சிங்கப்பெண்ணில் அம்மா சம்மதித்தும் சேர முடியாத அன்பு-ஆனந்தி காதல்.. மகேசுக்காக எல்லை மீறிய வார்டன்!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய புரோமோ வெளியாகி இருக்கிறது. அன்பு மற்றும் ஆனந்தி காதலுக்கு மிகப்பெரிய எதிர்ப்பு என்றால் அது அன்புவின் அம்மா லலிதா தான்.

மகேஷ் மனமிரங்கி இவர்கள் இருவரையும் சேர்த்து வைத்தாலும் லலிதா கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஆனந்தி தன்னை மருத்துவமனையில் பார்த்துக் கொண்ட விதம் லலிதாவின் மனதை மாற்றியது. இதனால் அவரே ஆனந்தியிடம் நீதான் என் மருமக என்று இன்றைய ப்ரோமோவில் சொல்கிறார்.

மகேசுக்காக எல்லை மீறிய வார்டன்!

ஆனால் விதி வலியது என்று சும்மாவா சொல்கிறார்கள். லலிதா சம்மதம் சொல்லும் வேளையில் ஹாஸ்டல் வார்டன் மகேசு உடன் சவரக்கோட்டைக்கு சென்று விடுகிறார்.

இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் வார்டன் மகேஷ் தரப்பில் இருந்து அழகப்பனிடம் பெண் கேட்கிறார்.

முதலில் முந்திய மகேஷ் ஆனந்தியை கரம் பிடிக்கிறானா, ஆனந்தியை உருகி உருகி காதலித்த அழகன் அவளை கரம் பிடிக்கிறானா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.