Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், நிலாவை பொருத்தவரை சோழன் கூட நடந்தது கல்யாணம் இல்லை, பொம்மை கல்யாணம் தான் என்று நம்பி ஒரு அடைக்கலம் தேடி தான் சோழன் வீட்டிற்கு தங்கி இருக்கிறார். ஆனால் தற்போது சோழன் சொன்ன பொய்யாலையும், நடேசன் செய்த கொலையும் பற்றி கேள்விப்பட்ட நிலா அந்த வீட்டில் இனியும் தங்கக் கூடாது என்றும் முடிவு எடுத்துவிட்டார்.
அந்த வகையில் நிலா வாடகைக்கு ஒரு வீட்டை பார்த்து அங்கே போவதற்கு தயாராகி விட்டார். அப்பொழுது பல்லவன், நிலா அண்ணி இந்த வீட்டிற்கு வந்த பிறகுதான் சந்தோஷமாகவே இருக்க முடிகிறது. வீடு வீடு மாதிரி இருப்பது என்னால் உணர முடிகிறது எல்லாத்துக்கும் காரணம் நீங்கள் தான் என்று நிலாவிடம் சொல்லி ஆசீர்வாதம் வாங்கிட்டு காலேஜுக்கு போகிறார்.
அப்படி பல்லவன் காலேஜுக்கு போன சூழ்நிலையில் நிலா பெட்டியை தூக்கிட்டு தனி வீட்டுக்கு போகிறேன் என்று சேரனிடம் சொல்லிவிட்டு சோழனை கூட்டிட்டு அந்த வீட்டிற்கு போகிறார். நிலா வீட்டை விட்டு போய்விட்டார் என்று பாண்டியன் மற்றும் பல்லவனுக்கு தெரிந்த நிலையில் வீட்டிற்கு வந்து சேரனிடம் நிலாவை பற்றி கேட்கிறார்கள்.
அப்பொழுது சேரன், நிலா வீட்டை விட்டு போய்விட்டார் என்று உண்மையை சொல்ல வரும்பொழுது சோழன் நிலாவை கூட்டிட்டு மாசாக மறுபடியும் அதை வீட்டுக்கு வரப் போகிறார். ஏனென்றால் நிலா பார்த்திருக்கும் அந்த ஓனரிடம் சோழன் ஏதாவது பொய் சொல்லி நிலாவுக்கு அந்த வீடு கிடைக்காத படி பண்ணி இருப்பார்.
அதனால் நிலா சோழனுடன் மறுபடியும் அந்த வீட்டிற்கு வந்து விடுவார். வந்த பிறகு பல்லவன் காட்டும் பாசத்திற்கு அடிமையாகி அந்த வீட்டிலேயே தங்கி எல்லோரையும் கொஞ்சம் கொஞ்சமாக மாத்தி ஒரு நல்ல குடும்பமாக கொண்டு வந்து கரை சேர்ப்பார்.