பிக் பாஸ் சீசன் 6 தொடங்கிய இரண்டு வாரங்களில் மக்களின் கவனம் பெறாத விக்ரமன் அதன்பிறகு அவருடைய நடவடிக்கை மற்றும் பேச்சியினால் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். எப்போதுமே விக்ரமன் நியாயத்தின் பக்கம் தான் நிற்கிறார். இதனால் ஃபைனல் லிஸ்டில் விக்ரமன் இடம்பெறுவார் என்பது உறுதியாகியுள்ளது.
ஆனால் வீட்டில் உள்ளவர்கள் விக்ரமனை தொடர்ந்து டார்கெட் செய்து வருகிறார்கள். பலமுறை அவரது வெற்றிகள் ஹவுஸ் மேட்ஸால் பறிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை ஒரு முறை கூட கமல் பேசியதில்லை. நேற்றைய எபிசோடில் விக்ரமனுக்கு நடந்த அநீதி அப்பட்டமாக தெரிந்தது.
அதாவது நேற்றைய டாஸ்க் தேவதைகளாக மாற வீட்டுக்குள் நுழைய விக்ரமன் மற்றும் ஜனனி முற்பட்டனர். அப்போது ஜனனியை உள்ளே அனுப்புவதற்காக மணிகண்டனை பிடித்துக் கொண்டார் அசீம். ஒரு வழியாக அவரின் உதவியால் உள்ளே ஜனனியும் போனார்.
அங்கு விக்ரமன் மற்றும் ஜனனியை தனலட்சுமியை தடுத்து நிறுத்துகிறார். அதையும் முன்னேறி முதல் ஆளாக விக்ரமன் முதலில் வீட்டினுள் கையை வைத்து விட்டார். அதன் பிறகு தான் ஜனனி கை வைத்தார். ஆனால் நான் தான் முதலில் கைவைத்தேன் என ஜனனி வாதாடுகிறார். விக்ரமன் நான் தான் என பலமுறை சொன்னாலும் மற்ற போட்டியாளர்கள் அதை நிராகரிக்கிறார்கள்.
அதுமட்டுமின்றி அருகில் இருந்த தனலட்சுமி, ஜனனி தான் ஜெயித்தார் என்று கூறுகிறார். அதேபோல் அசீம், நந்தினி ஆகியோரும் ஜனனிக்கு தான் சப்போர்ட். கடைசியில் வேறு வழியில்லாமல் விக்ரமன் வெற்றியை ஜனனிக்கு விட்டுக் கொடுக்கிறார். ஆகையால் அடுத்த வாரம் நாமினேஷனில் இருந்து ஜனனி காப்பாற்றப்பட்டுள்ளார்.
ஆகையால் இந்த வாரம் எபிசோடில் ஆண்டவர் கண்டிப்பாக இதற்கான நியாயமான தீர்ப்பை வழங்குவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். விக்ரமன் இடம் இருந்து பறிக்கப்பட்ட வெற்றியை மீண்டும் அவருக்கே கொடுத்து நாமினேஷனில் இருந்து விளக்கு அளிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள்.