1. Home
  2. தொலைக்காட்சி

அடேங்கப்பா! ரெடின் கிங்ஸ்லி சங்கீதாவுக்கு 2வது கணவரா.? மகளுடன் இருக்கும் வைரல் புகைப்படம்

அடேங்கப்பா! ரெடின் கிங்ஸ்லி சங்கீதாவுக்கு 2வது கணவரா.? மகளுடன் இருக்கும் வைரல் புகைப்படம்
ரெடின் கிங்ஸ்லி திருமணம் செய்து கொண்ட சங்கீதாவிற்கு இது இரண்டாவது திருமணம் .

Redin Kingsley: தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு தற்போது பஞ்சமாக இருக்கும் நிலையில் தன்னுடைய வித்தியாசமான குரலாலும், எதார்த்தமான நகைச்சுவையாலும் மெல்ல மெல்ல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ரெடின் கிங்ஸ்லி. தற்போதைய படங்களில் இவர் இல்லாத நகைச்சுவையே இல்லை என்பதற்கு ஏற்ப அனைத்து படங்களிலும் கமிட்டாகி நடித்துக் கொண்டு வருகிறார்.

அந்த வகையில் சினிமா கேரியரில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னுக்கு வரும் இவர் கடந்த டிசம்பர் 10ஆம் தேதி சின்னத்திரை நடிகையான சங்கீதாவை பெங்களூரில் வைத்து மிக எளிமையான முறையில் கிறிஸ்டின் முறைப்படி மற்றும் சங்கீதா வீட்டு முறைப்படி இந்து முறையிலையும் திருமணத்தை செய்து கொண்டார். இவர்கள் திருமணத்திற்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரிடமிருந்து வாழ்த்துக்களை பெற்றார்கள்.

இதனை தொடர்ந்து தற்போது ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாயிருக்கிறது. அதாவது ரெடின் கிங்ஸ்லியை திருமணம் செய்த சங்கீதாவிற்கு இது இரண்டாவது திருமணமாம். சங்கீதா ஏற்கனவே 2009 ஆம் ஆண்டு கிரிஷ் என்பவரை திருமணம் செய்திருக்கிறார். அதன் பின் இவர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது.

அடுத்து இவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பால் இருவரும் பிரிந்து விவாகரத்துக்கு போய்விட்டார்கள். விவாகரத்து நடந்த நிலையில் சங்கீதா அவருடைய முழு கவனத்தையும் நடிப்பில் செலுத்தி இருக்கிறார். அந்த வகையில் அரண்மனைக்கிளி மற்றும் திருமகள் போன்ற சீரியல்களில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற ஆனந்த ராகம் சீரியலில் துர்கா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து ரெடின் கிங்ஸ்லி மற்றும் சங்கீதா ஜோடியாக மைசூருக்கு சென்றிருக்கிறார்கள். அங்கே சங்கீதா அவருடைய பெண் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அந்தப் பெண்ணை பார்ப்பதற்கு அச்சு அசலாக அம்மாவை போல் முகபாவனையுடன் இருக்கிறது.

அந்த வகையில் இவ்வளவு பெரிய மகளுக்கு அம்மாவாக இருக்கும் சங்கீதாவை ரெடின் கிங்ஸ்லி காதலித்து திருமணம் செய்திருக்கிறார் என்ற விஷயம் தற்போது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தில் ஆளாக்கி இருக்கிறது. எது எப்படியோ மனம் ஒத்து போனதால் கல்யாண வாழ்க்கையில் ஒன்று கூடி சந்தோசமாக இருக்க வேண்டும் என்று பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

மகளுடன் இருக்கும் வைரல் புகைப்படம்

அடேங்கப்பா! ரெடின் கிங்ஸ்லி சங்கீதாவுக்கு 2வது கணவரா.? மகளுடன் இருக்கும் வைரல் புகைப்படம்
redin kingsley

ஜோடியாக மைசூரில் உலா வரும் ரெடின் கிங்ஸ்லி சங்கீதா

அடேங்கப்பா! ரெடின் கிங்ஸ்லி சங்கீதாவுக்கு 2வது கணவரா.? மகளுடன் இருக்கும் வைரல் புகைப்படம்
redin kingsley (1)
Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.