Ethirneechal 2: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், தான் என்ன பண்ணாலும் அடங்கிப் போவாங்க என்று நினைத்த குணசேகரன் கதிர், வாத்தியார் மற்றும் பார்கவியை அடித்து துன்புறுத்தி விட்டார்கள். இதனால் வாத்தியார் உயிர் பரிதாபமாக போய்விட்டது. இதை கேள்விப்பட்ட ஜனனி இனியும் பொறுமையாக இருந்தால் போதாது என்று வீட்டை விட்டு கிளம்ப தயாராகி விட்டார்.
மற்ற பெண்களும் கிளம்பிய நிலையில் கதிர் அவர்களை தடுத்தார். நீ யாருடா எங்களை தடுப்பதற்கு என்று ஜனனி, கன்னத்தில் பளார் என்று கதிரை அடித்துவிட்டு வீட்டிலிருந்து கிளம்பி விட்டார்கள். கிளம்பியதோடு வாத்தியார் இறப்பிற்கு நியாயம் வேண்டும் என்று போராட ஆரம்பித்தார்கள். இவர்கள் போராட்டத்தில் நியாயம் வாங்கி கொடுக்க வேண்டும் என்பதற்காக குற்றவை ஜீவானந்தம் மற்றும் சாருபாலாவும் கூடவே நிற்கிறார்கள்.
அந்த வகையில் நிச்சயம் இதன் மூலம் நமக்கு தண்டனை கிடைத்து விடும் என்ற பயத்தில் குணசேகரன் அறிவுக்கரசி மற்றும் கதிரும் பதட்டப்பட ஆரம்பித்து விட்டார்கள். அதிலும் குணசேகரன் மற்றும் கதிர் பெயர் போராட்டத்தில் சொல்வதால் நிச்சயம் நமக்கு இவர்கள் ஆப்பு வைத்து விடுவார்கள் என்று மரண பயத்தில் கதிர் நிற்கிறார்.
இதோடு குணசேகரனின் ஆணாதிக்கமும் முடிவுக்கு வந்துவிடும் என்பதற்கு ஏற்ற மாதிரி ஜனனி பதிலடி கொடுக்கப் போகிறார். ஆனால் குணசேகரன் இந்த கேசில் இருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக லாயரே வரவைத்து ஜனனிக்கு எதிராக இந்த கேசை திசை திருப்ப பார்க்கிறார்கள்.
அதனால் பார்கவி மனதளவில் காயப்பட்டு இருப்பதை சாதகமாக பயன்படுத்தி பார்க்கவி புத்தி சரியில்லாதவள் என்று கேசை திசை திருப்பவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்த முறை என்ன ஆனாலும் குணசேகரன் கதிர் அறிவுக்கரசி கூட்டத்திற்கு நிச்சயம் தண்டனை கிடைத்துவிடும்.