எதிர்நீச்சல் 2 சீரியலை டேமேஜ் பண்ணிய ஜீவானந்தம்.. கொத்தடிமைகளாக இருக்கும் மருமகள்கள்

Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியல் ஒரு புதுமை புரட்சியாகவும் பெண்களின் இலட்சியத்தை முன்னுதாரணமாக காட்டி சாதனை படைப்பார்கள் என்று எதிர்பார்த்த மக்களுக்கு தொடர்ந்து ஏமாற்றமாக தான் வந்து கொண்டிருக்கிறது. எதை நோக்கி கதை போய்க்கொண்டிருக்கிறது என்பதை கணிக்க முடியாத அளவிற்கு பெண்கள் அவர்களுடைய லட்சியத்தை விட்டு குணசேகரன் வீட்டு கொத்தடிமைகளாகத்தான் இருக்கிறார்கள்.

ஓவராக பிரச்சனையை சந்தித்த நிலையிலும் ஒரு செண்டிமெண்ட் ட்ராமா போட்டதும் அடிமையாகி அடுப்பாங்கரையிலும் வீட்டோட மருமகளாகவும் வாழ்வதற்கு அவர்களே தயாராகி விட்டார்கள். அதிலும் கதிர் மற்றும் ஞானம் கொஞ்சம் பாசத்தைக் காட்டி நகை பணத்தை போட்டதும் அப்படியே அடங்கி விட்டார்கள்.

இதுல அவ்வப்போது வாய் சவடால் மட்டும் விடுவதற்கு நான்கு பெண்களும் வாயை திறந்து ஓவராக பேசி நாங்கள் பேசுவதற்கு மட்டும் தான் லாயக்கி என்பதை நிரூபித்து விட்டார்கள். அதனால் தான் குணசேகரன் மற்றும் கதிர் அவருடைய ஆட்டத்தை அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள். இதற்கு பேசாமல் முதல் பாகத்தை முடித்துவிட்டு அதோடு நிறுத்தினால் கூட மக்கள் இந்த நாடகத்தின் மீதும் இயக்குனர் திருசெல்வத்தின் ஏதும் அதீத நம்பிக்கைடன் இருந்திருப்பார்கள்.

ஆனால் சன் டிவியுடன் மறுபடியும் இணைந்து இரண்டாம் பாகத்தை கொண்டு வந்து மொத்த இமேஜையும் டேமேஜ் பண்ணும் அளவிற்கு கதைகள் வந்து கொண்டிருக்கிறது. வழக்கம்போல் கிளைமாக்ஸ்சில் மட்டும்தான் பெண்கள் ஆவேசத்துடன் முன்னேறுவது போல் இந்த நாடகத்தை கொண்டு வந்து முடித்து விடுவார்கள். அதுவரை தேவையில்லாத டென்ஷனும் பிரச்சினை வைத்து நாடகத்தை இழுத்து அடித்து தான் வரப்போகிறார்கள்.