சித்தார்த்துக்கும் அஞ்சனாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கப் போகும் கதிர்.. மண்ணை கவ்வும் குணசேகரன்
Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், இதுவரை குணசேகரன் கூட இருந்து ஒட்டுமொத்த அட்டூழியத்தையும் கதிர் செய்திருந்தார். ஆனால் தற்போது திருந்திய பிறகு இவரைப் போல ஒரு கேரக்டர் இல்லை என்பதற்கு ஏற்ப ஒவ்வொரு விஷயங்களையும் பார்த்து பார்த்து நல்லதாக செய்து வருகிறார். அதாவது தர்ஷினிக்கு எந்தவித அநியாயமும் நடந்து விடக்கூடாது என்று சித்தப்பா என்கிற முறையில் மனதார நினைக்கிறார். அதற்காக அண்ணனை எதிர்த்து பக்காவாக காய் நகர்த்துகிறார். சித்தார்த் வீட்டில் இருந்தால் தானே தர்ஷினிக்கு கல்யாணத்தை பண்ணி வைப்பார். அவரை தூக்கி விட்டால் எப்படி கல்யாணம் நடக்கும் என்று காதும் காதுமாய் வச்சு சம்பவத்தை செய்து விட்டார் கதிர். இது தெரியாத உமையாள், சித்தார்த்தை கடத்திட்டு போயி அஞ்சனா கூட சேர்த்து வைக்கும் பிளானில் ஜனனி மற்றும் சக்தி தான் இந்த மாதிரி வேலையை பார்த்து இருக்க வேண்டும் என்று ராமசாமி மற்றும் கிருஷ்ணசாமி இடம் கூறுகிறார். அதனால் இவர்கள் இருவரும் ஜனனி மற்றும் சக்தியை பாலோ பண்ணுகிறார்கள். ஆனால் கமுக்கமாக இருந்து கதிர், சித்தார்த்துக்கும் அஞ்சனாவுக்கும் கல்யாணத்தை பண்ணி வைக்கப் போகிறார். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியிலும் சந்தோஷத்திலும் முதல் முறையாக வெற்றியை பார்க்கப் போகிறார்கள்.
