சக்தியின் மிரட்டலான பதிலால் ஆடிப்போன கரிகாலன்.. சூடு பிடிக்கும் எதிர்நீச்சல்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதிராவின் திருமண விஷயத்தில் ஜான்சி ராணியின் ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கரிகாலனுடன் தான் திருமணம் என்று கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் போனால், குணசேகரனுக்கு பெரிய சம்பவமே நடக்க காத்துக்கொண்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து  குடும்ப கவுரவத்திற்காக தனது தங்கையின் விருப்பத்தினை நிறைவேற்றாமல் வரட்டு கவுரவத்தில் இருந்து வருகிறார் குணசேகரன். அதிலும் விடாப்பிடியாக இருந்து தனது அண்ணனை எதிர்த்து போராடி வந்துள்ளார் ஆதிரா. தற்பொழுது விபரீத முடிவை எடுத்துள்ள நிலையில் அபாயகரமான கட்டத்தில்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Also Read: எல்லாருமே அரைகுறை நாய்ங்க.. அசிங்கப்படுத்தியதால் கொந்தளித்த எதிர்நீச்சல் குணசேகரன்

மேலும் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஆதிராவை நினைத்து மனம் நொந்துள்ள நிலையில், கரிகாலனும் ஜான்சிராணியும் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அதிலும் குணசேகரனை கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் போனால், மானத்தை வாங்க எதிர்பார்த்துக் கொண்டிருப்பதற்கு ஏற்றார் போல பெரும் சம்பவமானது நடந்துள்ளது.

தனது திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள கரிகாலன் உடைய குடும்பம் முழு வீச்சில் இறங்கியுள்ளது. இந்நிலையில் எப்படியோ மருத்துவமனையை தெரிந்து கொண்ட இவர்கள் அங்கு சென்று பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர். சக்தி, கரிகாலனிடம் யாரை கேட்டு இங்கு வந்த என்று தனது உச்சகட்ட கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதிலும் தக்க பதிலடி கொடுக்கும் விதத்தில், கரிகாலனுடன் ஆதிராவிற்கு திருமணம் நடக்காது என்று தனது மிரட்டலான பதிலை கொடுத்துள்ளார்.

Also Read: டிஆர்பி லிஸ்டில் இடம் பிடித்த டாப் 10 சீரியல்கள்.. அசுர வேகத்தை காட்டும் எதிர்நீச்சல்

இது ஒரு புறம் இருக்க குணசேகரன் மற்றும் கதிர் என இருவரும் கொத்தாக போலீஸிடம் சிக்கி உள்ளனர். ஆதிரா குடும்பம் மானத்தை வாங்கியுள்ளார் என்று கதிர் நடுரோட்டில் வைத்து அடித்துள்ளார். இந்த சம்பவமானது தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை அடுத்து கதிர் போலீசாரிடம் வசமாக சிக்கி உள்ளார்.

இந்நிலையில் தான் என்ற அகங்காரத்தில் ஆடிக் கொண்டிருக்கும் குணசேகரனை சிறையில் அடைக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் இவரின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர். இப்படியாக ஜான்சி ராணிக்கு எதிராக சக்தி கொடுத்துள்ள பதிலடி மிகவும் சரியானது என்று விமர்சகர்கள் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: மானத்தை வாங்க சந்தர்ப்பம் பார்க்கும் ஜான்சி ராணி.. அடி மேல் அடி வாங்கும் எதிர்நீச்சல் குணசேகரன்