ஏமாற்றத்தை சந்தித்து நிற்கதியாக நிற்கும் மீனா.. முத்துவிடம் அடாவடியாக பேசிய விஜயா, மொத்தமாக அடங்கிய ரோகினி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனா புதுசாக எடுக்க போகும் ஆர்டருக்கு முன் பணமாக இரண்டு லட்ச ரூபாய் பணம் தேவைப்படுகிறது என்பதை தெரிந்து கொண்ட முத்து வீட்டில் அப்பாவிடம் பேசலாம் என்று கூப்பிடுகிறார். அண்ணாமலை வந்து இருந்த பொழுது வீட்டில் இருப்பவர்களும் மொத்தமாக வந்து விட்டார்கள்.

அப்பொழுது அவர்கள் முன்னிலையில் முத்து, மீனா எடுக்க போகும் டெக்கரேஷனுக்கு இரண்டு லட்ச ரூபாய் பணம் தேவைப்படுகிறது அதற்கு உங்களுடைய உதவி வேண்டும் என கேட்கிறார். உடனே விஜயா என்னுடைய வீட்டு பாத்திரத்தை வைத்து பணம் கேட்க உனக்கு வெட்கமாக இல்லையா? சொந்தக்காலில் என்று உங்களால் ஜெயிக்க முடியவில்லை என்றால் எதற்காக இந்த வேலையை பார்க்கணும்.

உங்களுக்காக என்னுடைய வீட்டு பத்திரத்தை வைத்து கடன் வாங்கி கடைசியில் நான் நடுத்தெருவில் நிற்க முடியுமா? என்னால எல்லாம் பணம் தர முடியாது என்று சொல்லியதோடு ஏற்கனவே பணக்கார மருமகள் என்று பொய் சொல்லி குடும்பத்தை ரெண்டாக்கி விட்டால் ரோகிணி, இப்பொழுது நீங்க பணம் கேட்டு என்னை ஒன்னும் இல்லாமல் ஆக்க போறீங்களா என்று முத்து மற்றும் மீனாவிடம் அடாவடியாக விஜயா பேசி விட்டார்.

உடனே முத்து, நீங்க பேச வேண்டியது எல்லாம் பேசி முடித்து விட்டீர்களா? நான் என்ன சொல்ல வந்தேன் என்பதை முழுசா கூட கேட்காமல் நீங்களே உங்க இஷ்டத்துக்கு பேசாதீங்க. எனக்கு கொஞ்சம் கூட அப்படி ஒரு எண்ணம் இல்லை உங்க வீட்டு பத்திரத்தை வைத்து பணம் வாங்க வேண்டும் என்று. நான் அப்பாவிடம் பேச வந்தது வேற என்று சொல்லி பாட்டியிடம் இரண்டு லட்ச ரூபாய் பணம் கேட்கப் போகிறேன் அதற்கு முன் உங்களிடம் ஒரு பெர்மிஷன் கேட்க தான் வந்தேன் என்று சொல்கிறார்.

அப்பொழுது சுருதி, விஜயாவை பார்த்து எல்லா விஷயத்திலும் முந்திரிக்கொட்டை மாதிரி முன்னாடி வந்து பேசுவதே உங்களை வேலையா போச்சு. கடைசியில் நீங்கள் தான் நோஸ்கட் வாங்கி நிற்கிறீங்க என்று பதில் அளித்து விட்டார். அடுத்ததாக அண்ணாமலை பாட்டியிடம் வாங்குவதற்கு என்னிடம் பெர்மிஷன் வாங்க வேண்டிய அவசியமே இல்லை. உன்னையும் அவங்களுடைய பிள்ளை மாதிரி தான் வளர்த்திருக்காங்க அதனால் உனக்கு எல்லா உரிமையும் இருக்குது தாராளமாய் போய் கேளு என்று சொல்லிவிடுகிறார்.

அதன் பிறகு மீனா, பாட்டி தனியாக சம்பாதித்து அவங்களுக்கு என்று வேலையை பார்த்து வருகிறார்கள். அதனால் அவர்களிடம் பணம் கேட்டு தொந்தரவு பண்ண வேண்டாம். எனக்கு இதற்கு முன்னாடி பணம் கொடுத்து உதவிய பைனான்சியரை பார்த்து பணம் கேட்டுட்டு வருகிறேன் என்று சொல்லி மீனா கிளம்பி விடுகிறார். அப்படி கிளம்பியதும் பைனான்சியரிடம் நடந்த விஷயத்தையும் சிந்தாமணி இடம் விட்ட சவாலை பற்றியும் சொல்கிறார்.

உடனே பைனான்சியர் சிந்தாமணி இடம் வம்பு வைத்தால் என்ன பிரச்சனையாகும் என்பதே உணர்ந்து பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் பணத்துக்கு என்ன பண்ணுவது என்று தெரியாமல் மீனா முழிக்கிறார். அடுத்ததாக முத்து கார் ஓட்டிட்டு வரும் பொழுது டிராபிக் போலீஸ் அருணுக்கும் முத்துக்கும் தகராறு ஏற்படுகிறது. இவ்வளவு தூரம் விஜயா வீட்டில் பிரச்சனைகள் நடந்த பொழுதும் ரோகிணி எதுவும் பேச முடியாமல் மொத்தமாக வாய் அடைத்து அடங்கிப் போய் நிற்கிறார்.