Moondru Mudichu Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மூன்று முடிச்சு சீரியலில், அர்ச்சனாவை கண்மூடித்தனமாக நம்பிய சுந்தரவல்லிக்கு நந்தினி வைத்த செக். அதாவது சூர்யா தன் கையில் அடிபட்டு இருக்கிறது என்பதால் தனக்கு பதிலாக தன் மனைவி நந்தினி கையெழுத்து போடும் அதிகாரம் உண்டு என்று சொல்லி இருந்தார். இதனால் கடுப்பான சுந்தரவல்லி, சூர்யாவுக்கு எதிராக அர்ச்சனாவை ஆபீசுக்கு கூட்டிட்டு வந்து அதிகாரம் பண்ண ஆரம்பித்தார்.
ஆனால் சூர்யா முன்னாடி எதுவும் செல்லுபடியாகாது என்று சொல்வதற்கு ஏற்ப அதிகாரத்துடன் ஆட்டம் போட நினைத்த அர்ச்சனாவை அடக்கும் அளவிற்கு சூர்யா பதிலடி கொடுத்து விட்டார். பிறகு தொழிலாளர்களிடம் மன்னிப்பு கேட்ட அர்ச்சனா விஷயம் ரேணுகாவுக்கு தெரிந்ததால் ரேணுகா போன் பண்ணி அர்ச்சனாவை புகழ்ந்து பேசி நந்தினியை திட்டினார்.
இதை கேட்டுக் கொண்ட நந்தினி, அர்ச்சனாவின் ஆள் தான் ரேணுகா என்று புரிந்து கொண்டார். உடனே சூர்யாவிடம் சொல்லிய நிலையில் ரேணுகாவின் போனை வாங்கி சுந்தரவல்லி மற்றும் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரியப்படுத்திவிட்டார். ஆரம்பத்தில் நம்ப மறுத்த சுந்தரவல்லிக்கு ரேணுகா அர்ச்சனாவிடம் பேசுவது போல் போன் பண்ணி விடுகிறார்.
உடனே அர்ச்சனா, ரேணுகாவிடம் பேசும்பொழுது சுந்தரவல்லியை அவமானப்படுத்தும் விதமாக பேசி ஒட்டுமொத்த குடும்பத்தையும் பழிவாங்கும் எண்ணத்துடன் இருப்பதையும் உளறி விடுகிறார். பிறகு அர்ச்சனாவை வீட்டுக்கு வரச் சொல்லிய நிலையில் ரேணுகா, கையும் களவுமாக மாட்டின விஷயம் தெரிந்து விட்டது. பிறகு அர்ச்சனா இந்த குடும்பத்தையும் உங்களையும் சும்மா விட மாட்டேன் என்று சவால் விட்டுப் பேச ஆரம்பித்து விட்டார்.
இத்தனை நாளாக அர்ச்சனாவை கண்மூடித்தனமாக நம்பிய சுந்தரவல்லிக்கு நந்தினி மூலம் அர்ச்சனாவின் முகத்திரை கிழிந்து விட்டது. இனி இந்த சுந்தரவல்லி நினைத்தாலும் சூர்யா நந்தினியை பிரிக்க முடியாது.