சத்யாவின் திருட்டு சம்பவத்தில் சீதா மீது முத்துவுக்கு வந்த சந்தேகம்.. ரோகினியை காப்பாற்ற பலிகடாக சிக்கிய ரவுடி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனாவின் தம்பி சத்தியா படிக்கும் பொழுது லோக்கல் ரவுடி சிட்டியுடன் சேர்ந்து கையாலாக இருந்தார். ஆனால் அதன் பிறகு மீனா மற்றும் முத்து, சத்யாவை திருத்தி மறுபடியும் படிப்பதற்கு அட்வைஸ் பண்ணினார்கள். அதன்படி சத்தியா, படிப்பில் கவனம் செலுத்தி லோக்கல் ரவுடி சிட்டியுடன் இருந்து விலகி விட்டார்.

இதனால் கோபப்பட்ட சிட்டி, சத்யாவை பரீட்சை எழுத விடாமல் தடுத்துவிட்டால் அவனால் அடுத்து வேலைக்கு போக முடியாது மறுபடியும் நம்முடன் சேர்ந்து விடுவான் என்று பிளான் பண்ணினார். அதற்காக கடைசி எக்ஸாம் எழுத போகும் சத்யாவை கடத்தி விட்டார். சத்யாவை காணவில்லை என்று தெரிந்த சீதா, முத்துவுக்கு போன் பண்ணி தகவலை கொடுக்கிறார்.

உடனே முத்து மீனா மற்றும் செல்வம் மூன்று பேரும் சேர்ந்து சத்யாவை கண்டுபிடிக்கும் வேலையில் இறங்கினார்கள். அப்படி கண்டுபிடிக்கும் பொழுது ஒரு சிசிடிவி கேமராவை பார்க்கிறார்கள். அதில் சத்யாவை லோக்கல் ரவுடிதான் கடத்துட்டு போயிருக்கிறார் என்பது தெரிய வந்துவிட்டது. ஆனாலும் எந்த இடத்தில் வைத்திருக்கிறார்கள் என்று தெரியாமல் தேடி அலையும் பொழுது சீதா, சத்யாவின் போன் நம்பரை டிராபிக் போலீஸ் அருனிடம் கொடுத்து கண்டுபிடிக்க சொல்கிறார்.

அதன்படி அருண், சைபர் கிரைம் டிபார்ட்மெண்டுக்கு அந்த நம்பரை கொடுத்து சத்யா இருக்கும் இடத்தை கண்டுபிடித்து சொல்கிறார். உடனே அவருக்கு அந்த லொகேஷன் தெரிந்தவுடன் சீதாவுக்கு போன் பண்ணி சொல்கிறார். பிறகு சீதா முத்துவுக்கு போன் பண்ணி அந்த இடத்தை சொல்லிய நிலையில் முத்து அங்கே சென்று சத்யாவை காப்பாற்றி விடுகிறார். அத்துடன் டிராபிக் போலீஸ் அருண், போலீசுக்கு தகவலை கொடுத்ததால் போலீசும் அங்கே வந்து லோக்கல் ரவுடி சிட்டியை பிடித்து விடுகிறார்கள்.

பிறகு முத்து அந்த போலீஸிடம் நான் கம்பிளைன்ட் கொடுக்கவில்லை எப்படி நீங்கள் இந்த இடத்தை கண்டுபிடித்து வந்தீர்கள் என்று கேட்கிறார். அதற்கு அந்த போலீஸ் எங்களுடைய டிபார்ட்மெண்டுக்கு தகவல் வந்தது என்று சொல்லி விடுகிறார். இதனால் சந்தேகப்பட்ட முத்து வீட்டுக்கு வந்து மீனாவிடம் எப்படி சீதாவுக்கு சத்தியா இருக்கும் லொகேஷன் தெரிந்தது, யார் மூலம் போலீஸ் அங்கே வந்தார்கள் என்று கேட்கிறார். அந்த வகையில் சீதா மீது சந்தேகப்படும் முத்துவுக்கு அடுத்து சீதாவின் காதல் விஷயமும் தெரிய வரப்போகிறது.

இதையெல்லாம் பார்த்தால் ரோகிணியை விஜயாவிடம் இருந்து தப்பிக்க வைப்பதற்காகவும் ரோகிணியே அடுத்து காப்பாற்றுவதற்காகவும் இந்த லோக்கல் ரவுடி விஷயத்தை கொண்டு வந்து மிகப்பெரிய டிராமாவாக நடத்தி கதையே வேறு விதமாக கொண்டு வருவது போல் இருக்கிறது. கடைசி வரை ரோகிணி தப்பு பண்ணினாலும் கெத்தாக தான் இருப்பார் என்பதற்கேற்பதான் காட்சிகள் அமைந்து வருகிறது. எந்த தப்பும் பண்ணவில்லை என்றாலும் மீனா அந்த வீட்டு வேலைக்காரியாக தான் இருப்பார்.