Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், அரசியே சீண்டி பார்க்கும் விதமாக குமரவேலு பாண்டியன் குடும்பத்தை தவறாக பேசிய நிலையில் கோவப்பட்ட அரசி, சாம்பாரை தூக்கி குமரவேலு தலையில் ஊற்றி விட்டார். இதனால் குமரவேலு கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணிய நிலையில் அங்கு இருந்த சக்திவேல், வடிவு மற்றும் அப்பத்தா அனைவரும் வந்து என்னாச்சு என்று கேட்கிறார்கள்.
அப்பொழுது குமரவேல் இவர்களை சமாளிக்கும் விதமாக நாங்கள் பேசிக் கொண்டே விளையாடி சாப்பிட்டோம். அதனால் இப்படி ஆகிவிட்டது என்று சொல்லிவிடுகிறார். பிறகு முகத்தை கழுவ போன குமரவேலுவிடம் என் குடும்பத்தை பற்றி இனி பேசினால் உங்களுக்கு இதுதான் கெதி என்று அரசி எச்சரிக்கை செய்து விட்டார்.
அடுத்ததாக கோமதி வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அங்கே ராஜி வந்து நான் கடைக்கு போகிறேன் என்று சொல்கிறார். அதற்கு நான் கடைக்கு போனாலே உங்க மாமா ரொம்ப கோபப்படுவார். அவருக்கு வீட்ல இருக்க பெண்கள் யாரும் கடைக்கு வந்தால் பிடிக்காது. பிறகு நீ போய்ட்டு வந்து அவர் கோபமாக பேசிவிட்டார் என்று சொன்னால் நான் பொறுப்பாக மாட்டேன் என்று சொல்கிறார்.
அதற்கு ராஜி அப்படி எதுவும் ஆகாது நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி விடுகிறார். அடுத்ததாக கோமதி. ராஜியிடம் உனக்கு ரிசல்ட் வரும் தான என்று கேட்கிறார். அதற்கு ராஜி இன்னும் இரண்டு நாள் இருக்கிறது என்று சொல்லிய நிலையில் கதிர் மற்றும் அரசி பற்றி கேட்கிறார். உடனே ராஜி எல்லாத்துக்கும் தான் ரிசல்ட் வருகிறது நாங்கள் நல்ல தான் எழுதி இருப்போம் நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று சொல்கிறார்.
அடுத்ததாக கதிரை கூட்டிட்டு பாண்டியன் கடைக்கு ராஜி போகிறார். அங்கே போனதும் ராஜியை பார்த்து பாண்டியன் என்ன திடீரென்று கடைக்கு வந்திருக்கிறாய் என்று கேட்கிறார். அதற்கு ராஜி சும்மாதான் என்று சொல்லிய நிலையில் உனக்கு தான் படிக்க வேண்டிய வேலை நிறைய இருக்கிறது. அதை போய் பண்ண வேண்டியதுதானே என்று சொல்கிறார்.
உடனே ராஜி காலேஜ் முடிந்துவிட்டது படிக்க வேண்டியதும் இல்லை என சொல்லிய நிலையில் பாண்டியன் போலிஸ் ஆவதற்கு படிக்க வேண்டியது இருக்கு தானே என கேட்கிறார். உடனே ராஜி, உங்களுக்கு தான் நான் போலீஸ் ஆகிறது பிடிக்காது, பின்ன எதற்கு கேட்கிறீர்கள் என கேட்கிறார். அதற்கு பாண்டியன் உன் வீட்டுக்காரர் சம்மதம் கொடுத்துவிட்டார். இதில் நான் மறுப்பு சொல்வதற்கு என்ன இருக்கிறது உனக்கு ஆசை இருந்தால் படித்துக் கொள் என ராஜியின் கனவுக்கு பாண்டியன் பச்சை கொடி காட்டி விடுகிறார்.
அடுத்ததாக சுகன்யா சக்திவேல் வீட்டில் பணத்தை பார்த்ததே வைத்து பழனிவேல் இடம் சொல்கிறார். இதை கேட்ட பாண்டியன் விட்டு குடும்ப குத்து விளக்கு மீனா புத்திசாலித்தனமாக சக்திவேல் குடும்பத்தை இன்கம் டேக்ஸ் ஆபீஸ்க்கு போன் பண்ணி போட்டு விடுகிறார். அவங்க வந்து மொத்த பணத்தையும் சக்திவேல் மற்றும் முத்துவேல் இடம் இருந்து அபகரித்து விட்டார்கள்.