எம்டன் மகனின் உயிருக்கே உலை வைத்த குடும்பம்.. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடல பாண்டியா

Pandian Stores Today Episode Promo: தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்கள். ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அது எதிர்மாறாக நடக்கிறது. கதிர்- ராஜி இருவரின் திருமணத்தையும் இரு வீட்டாராலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதிலும் ராஜியின் அப்பா முத்துவேல் மற்றும் சித்தப்பா சக்திவேல் அண்ணன் குமார் எல்லோரும் கதிர் மீது கொலவெறியில் இருக்கின்றனர்.

குறிப்பாக சக்திவேலின் மகள் குமார் தன்னுடைய தங்கை ராஜியை கதிர் ஏமாற்றி திருமணம் செய்துவிட்டார். குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே கதிர், ராஜியை திருமணம் செய்து கொண்டதால், எப்படியாவது அவரை தீர்த்து கட்ட வேண்டும் என்று தன்னுடைய நண்பர்களை ஏவி விட்டு இன்று இரவுக்குள் கதிரை கொல்ல பார்க்கிறார்.

இது எப்படியோ செந்திலுக்கு தெரிந்து விட, உடனே கதிரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று தன்னுடைய அண்ணன் சரவணனிடம் சொல்கிறார். குமார் அனுப்பியவர்கள் கதிரை கண்டுபிடிப்பதற்கு முன்பே, செந்தில் மற்றும் சரவணன் இருவரும் குளத்து கரையில் இருந்த கதிரை பார்த்து விடுகின்றனர்.

கதிரின் உயிருக்கு ஏற்பட்ட பேராபத்து

கதிருடன் அவருடைய இரண்டு அண்ணன்கள் இருப்பதை பார்த்ததும் கொலை செய்ய வந்தவர்கள் திரும்பி சென்று விடுகிறார்கள். ராஜியை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் கதிர் அவரை திருமணம் செய்து கொண்டார். இந்த உண்மை வெளியில் தெரிந்தால் மட்டுமே கதிரின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்கும்.

இவ்வளவு கொலவெறி உடன் இருக்கும் முத்துவேல் குடும்பத்தினரிடம் கதிரே எல்லா உண்மையும் சொல்லப் போகிறார். ஏனென்றால் பாண்டியனை கூட கதிரால் சமாளிக்க முடிகிறது, ஆனா முத்துவேல் குடும்பத்தில் இருப்பவர்கள் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்கின்றனர்.

இனிவரும் நாட்களில் இதனால் கோமதியின் வற்புறுத்துதலில் கதிர் எல்லாம் உண்மையையும் முத்துவேல் குடும்பத்தினரிடம் சொல்லப் போகிறார். பாண்டியனின் ஆதரவு இல்லாவிட்டாலும் இனிமேல் மாமன் முத்துவேலின் துணை கதிருக்கு இருக்கும். இனி தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலே சூடுபிடிக்கப் போகிறது.