தொடர்ந்து நச்சரிக்கும் மாமியார்.. கோர்ட்டு வாசலில் கேப்ரில்லாவுக்கு நடந்த கொடுமை

விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் இஷ்டம் இல்லாமல்தான் காவியா, பார்த்திபனை திருமணம் செய்து கொண்டார் என்பதை அறிந்ததும் மாமியார், அவர்களை பிரித்துவிட பார்க்கிறார். இன்னிலையில் காவியாவாக நடிக்கும் கேப்ரில்லாவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக பார்த்திபன் மற்றும் அவர்களது குடும்பத்தை பிடித்துப் போகிறது.

ஆனால் இதைப் புரிந்து கொள்ளாத மாமியார் காவியாவிற்கு நல்லது செய்வதாக நினைத்து பார்த்திபனுக்கு காவியாவை விவாகரத்து கொடுத்துவிட சொல்கிறார். இதற்காக அவரே ஒரு வழக்கறிஞரை ஏற்பாடு செய்து காவியாவை கோர்ட்டுக்கு வர சொல்கிறார். இந்த விவகாரத்தில் இஷ்டம் இல்லை என்பதை காவியா மாமியாரிடம் சொல்ல தயங்குகிறார்.

இருப்பினும் மாமியார் சொல்லும்போது தட்டிப் பேசக்கூடாது என்பதால், அவர் சொன்னபடி கோர்ட்டுக்கும் கேப்ரில்லா வருகிறார். இருவரும் தொலைவில் இருந்தபடி ஒருவரை ஒருவர் சந்தித்து நெருங்கி வரும் சமயத்தில், லாரி ஒன்று சாலையில் கட்டுப்பாடின்றி வேகமாக வருகிறது.

மாமியாரின் உயிரை காப்பாற்ற நினைத்த கேப்ரில்லா, லாரியின் இடையில் புகுந்து மாமியாரை காப்பாற்றுகிறார். இதனால் கோட்டு வாசலிலேயே கேப்ரில்லாவிற்கு பலத்த காயம் ஏற்படுகிறது. அதன் பிறகு மாமியார் பார்த்திபனை தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு நடந்த விஷயத்தை கூறுகிறார்.

பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காவியாவிற்கு தீவிர சிகிச்சை வழங்கப்படுகிறது. அந்த சமயத்தில் பார்த்திபன் தன்னுடைய அம்மாவிடம் எதற்காக இருவரும் கோர்ட்டுக்கு சென்றீர்கள் என துருவித்துருவி கேள்வி கேட்கிறார். ஒருகட்டத்தில் அவரும் உண்மையைச் சொல்லி விடுகிறார்.

ஆறு மாதத்திற்குள் காவியாவின் மனதை மாற்ற நினைத்த பார்த்திபனுக்கு, அவருடைய அம்மா இப்படி எல்லாம் செய்தது கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. இந்த விஷயத்தில் காவியாவிற்கு சப்போர்ட்டாக பேசும் பார்த்திபனை மேலும் பிடித்து போவதால் சீக்கிரம் அவரது மனதில் இருக்கும் காதலை காவியா வெளிப்படுத்த போகிறார்.