கதிர்காக பரிசை தட்டித் தூக்க போகும் ராஜி, கோமதியை சமாளிக்கும் மீனா.. பாண்டியன் வைக்கப் போகும் ட்விஸ்ட்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், அரசியின் கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதற்காக கோமதி கோவிலுக்கு பிரார்த்தனை பண்ணுவதற்கு மருமகளை கூட்டிட்டு வந்திருக்கிறார். அப்படி வந்த பொழுது கோவிலில் நடன போட்டிகளை வைத்து பரிசு தொகையை அறிவித்திருக்கிறார்கள்.

அதில் முதல் பரிசை வெறுப்பவர்களுக்கு கார் பரிசாகவும், இரண்டாவதாக பைக்கு, மூன்றாவதாக தங்க வளையல் போன்ற பரிசுகள் கிடைக்கும் என்று நோட்டீஸ் போட்டிருந்தது. இதை பார்த்த ராஜிக்கு திடீரென்று இந்த நடனப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுவிட்டால் இரண்டாவது பரிசாக பைக் நமக்கு கிடைத்துவிடும். அந்த பைக் நிச்சயமாக கதிருக்கு யூஸ் ஆக இருக்கும் என்று நினைக்க ஆரம்பித்து விட்டார்.

அந்த வகையில் இந்த விஷயத்தை மீனாவிடம் ராஜி சொல்கிறார். உடனே எப்படியாவது கோமதி இடம் சம்மதம் வாங்க வேண்டும் என்று ராஜி, கோமதிக்கு ஐஸ் வைக்கிறார். அதற்கு கோமதி என்ன ஓவராக ஐஸ் வைக்கிற மாதிரி இருக்கிறது. என்னால் ஏதோ ஒரு காரியம் ஆக வேண்டியது போல எனக்கு தெரிகிறது என்ன விஷயம் என கேட்கிறார்.

அதற்கு ராஜி கோவிலில் ஒரு நடனப்போட்டி இருக்கிறது அதில் நான் கலந்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறார். உடனே கோமதி என்னவென்று கூட சரியாக கேட்காமல் அதெல்லாம் முடியாது. தேவையில்லாமல் என்னை பிரச்சினையில் மாட்டி விடாதீர்கள். இந்த பேச்சை இதோட நிறுத்திக்கொள் இல்லையென்றால் நான் பொல்லாதவளாக மாறி விடுவேன் என்று கண்ணா பின்னா என்று திட்ட ஆரம்பித்து விட்டார்.

ஆனாலும் ஆவேசமாக இருக்கும் கோமதியை சாந்தப்படுத்தும் விதமாக மீனா, தாஜா பண்ணி விடுவார். அந்த வகையில் கதிர்காக நடன போட்டியில் கலந்து கொண்டு ராஜி வின் பண்ணி விடுவார். ஆனால் இரண்டாம் பரிசு பெறாமல் முதல் பரிசை வெல்லும் அளவிற்கு கார் கிடைத்து விடும். இந்த விஷயம் பாண்டியன், அவருக்கு சாதகமாக பயன்படுத்தும் விதமாக அரசிக்கு வரதட்சணையாக கொடுக்க வேண்டும் என்று பேசிய காருக்கு பதிலாக இந்த காரை பரிசாக கொடுக்கலாம் என முடிவு எடுத்து விடுவார்.

இந்த டுவிஸ்ட் எதிர்பார்க்காத ராஜி என்ன பண்ணுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் போது கதிர் நிச்சயமாக ராஜியின் மனசில் இருக்கும் எண்ணத்தை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற மாதிரி பாண்டியனுக்கு செக் வைப்பார்.