கதிர்காக வாய்ப்பை மிஸ் பண்ணும் ராஜி.. டாப் கியரில் போகும் ரொமான்ஸ்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், குமரவேலு பிரச்சனை ஒரேடியாக முடிந்த நிலையில் ராஜி மற்றும் கதிர் மனம் விட்டு பேசிக்கொள்கிறார்கள். அப்பொழுது கதிர், உன்னுடைய நடன போட்டி பார்ப்பதற்கு என்னை கூப்பிட்டாய். ஆனால் என்னால் எப்படி வர முடியும் என்று யோசித்து நிலையில் சூழ்நிலையை என்னை வரவைத்து விட்டது என்று சொல்லி ராஜியை சமாதானப்படுத்துகிறார்.

ராஜி அடுத்த கட்ட லெவலுக்கு போய் ஆடுவதற்கு தேவையான பொருட்கள் வேண்டும் என்று சொல்லிய நிலையில் கதிர், ராஜிக்காக டிரஸ் மற்றும் தேவையான பொருட்கள் எல்லாத்தையும் வாங்கிட்டு வந்து கொடுக்கிறார். ராஜி வீட்டில் ப்ராக்டிஸ் எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது கோமதி சப்போர்ட் பண்ணி ராஜி முதல் பரிசை வாங்க வேண்டும் என்று பாராட்டுகிறார்.

அப்பொழுது அங்கு வந்த மீனா, குமரவேலு விஷயத்தை யோசித்து டல்லாக இருக்கிறார். பிறகு ராஜியிடம் மன்னிப்பு கேட்டு அழுது பீல் பண்ணும் பொழுது மீனாவை சமாதானப்படுத்துவதற்கு ராஜி முயற்சி எடுக்கிறார். இவர்களுடைய ஒற்றுமையை பார்த்து கோமதி இப்படியே கடைசி வரை நீங்கள் இரண்டு பேரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்.

அடுத்ததாக எல்லோரும் கிளம்பி நடன போட்டிக்கு போன பொழுது ராஜி ஆடி முடித்து முதல் நான்கு போட்டியாளர்களில் ஒருவராக வந்து விடுகிறார். இதனால் அங்கே கோபமான மற்ற இளைஞர்கள் ராஜிடம் பிரச்சினை பண்ணுகிறார்கள். உடனே கதிர் மற்றும் செந்தில் அவர்களிடம் சண்டை போடும் பொழுது ஒரு சின்ன பஞ்சாயத்து ஏற்பட்டு விட்டது.

பிறகு அந்த பஞ்சாயத்து முடித்துவிட்ட நிலையில் ராஜி ஆடி முதல் மூன்று இடத்திற்கு வந்து விட்டார். அப்படி மூன்று பேர் ஆடும்பொழுது டான்ஸ் ரொம்பவே கடினமாகிவிட்டது என்பதால் ராஜியும் அவருடைய பங்குக்கு கொஞ்சம் ரிஸ்க் எடுத்து ஆட ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் முதல் இரண்டு போட்டியாளர்களில் ராஜி மற்றும் இன்னொருவர் தேர்வாகி விட்டார்கள்.

உடனே கோமதி எப்படியாவது முதல் பரிசை வாங்கி விடு என்று வாழ்த்துகிறார். அதனால் ராஜிக்கு ஒரு சின்ன பயம் வந்துவிட்டது முதல் பரிசு கார் கிடைத்து விடுமோ என்று, அதனால் ஆடும் பொழுது சின்ன ஒரு வாய்ப்பை மிஸ் பண்ணும் விதமாக கால் சுளுக்கி விட்டது போல் சொதப்புகிறார். கதிர்காக வேண்டுமென்றே அந்த வாய்ப்பை மிஸ் பண்ணி முதல் பரிசை வேண்டாம் என்று இரண்டாவது பரிசை குறி வைத்து விட்டார்.

அப்படி ராஜி குறி வைத்தது போல் இரண்டாவது பரிசை கதிர்காக பைக்கை வாங்கிவிட்டார். அந்த பைக்கில் தான் ராஜியும் கதிரும் ஒன்றாக சேர்ந்து ஊருக்கு போவார்கள் போல. இதன் மூலம் ராஜிக்கு நம் மீது எவ்வளவு காதல் இருக்கிறது என்பது கதிர் புரிந்து கொள்வார். இனி இவர்களுக்குள் ரொமான்ஸ் டாப் கியரில் தான் பறக்கப்போகிறது.

அதே மாதிரி அரசியும் சதிசை புரிந்து கொண்டு மனதார ஏற்று கொண்டார். அதனால் பாண்டியன் ஏற்பாடு பண்ண கல்யாணத்தில் எந்தவித குளிர்படியும் ஏற்பட வாய்ப்பு இருக்காது. ஆனால் மீனாவின் வேலைக்கு சக்திவேல் ஆப்பு வைப்பதால் மீனாவுக்கு அரசாங்க வேலை கிடைக்காமல் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது.