பாக்கியா திரும்பும் இடமெல்லாம் கண்ணிவெடியை வைக்கும் சம்மந்தி.. சப்போர்ட்டாக துணை நிற்கும் கோபி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா வாழ்க்கையை ஏற்கனவே கோபியின் குடும்பம் பாழாக்கிவிட்டது. இது போதாது என்று தற்போது புதுசாக வந்த சுதாகரும் பாக்கியாவின் பிசினஸை கெடுக்கும் விதமாக களத்தில் இறங்கி விட்டார்.

அந்த வகையில் இனியாவின் கல்யாண வாழ்க்கையே வைத்து பாக்யாவின் இரண்டாவது ஹோட்டலை அபகரித்து விட்டார். இதனால் கடுப்பான பாக்கியா, சுதாகரை சந்தித்து சவால் விட்டு அவமானப்படுத்தியது சுதாகரின் கௌரவத்தை ரொம்பவே தூண்டி விட்டது.

இதனால் பாக்கியவிடம் இருக்கும் முதல் ஹோட்டலையும் பிடுங்க வேண்டும் என்று அந்த ஹோட்டலின் ஓனர் இடம் பேசி பாக்கியாவை அந்த ஹோட்டலில் இருந்து காலி பண்ணுவதற்கு பிளான் பண்ணி விட்டார். இதை தெரிந்து கொண்ட பாக்கியம் வீட்டிற்கு சென்று உங்களுடைய சம்பந்தி என்னுடைய இன்னொரு ஹோட்டலையும் பிடுங்கி விட்டார் என்று சொல்கிறார்.

இதெல்லாம் அவர் என்னை பழிவாங்க வேண்டும், நான் ஹோட்டலை தர மாட்டேன் என்று சொன்னதற்காக இந்த மாதிரி பண்ணுகிறார் என்று பாக்கியா சொல்கிறார். உடனே கோபியும் ஈஸ்வரியும் வழக்கம்போல் அவர் அப்படியெல்லாம் பண்ணக்கூடிய ஆள் இல்லையே என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

இருந்தாலும் கோபி, சுதாகரின் வீட்டுக்கு சென்று பாக்கியாவின் லட்சியம் பிசினஸில் ஜெயிக்க வேண்டும் என்பதுதான். ஆனால் நீங்கள் பாக்யாவின் ஹோட்டல் வாங்கியதோடு மட்டும் இல்லாமல் இருக்கும் இன்னொரு ஹோட்டலையும் வாங்குவதற்கு முயற்சி எடுப்பதாக நான் கேள்விப்பட்டேன் என்று கேட்கிறார்.

ஆனாலும் வழக்கம் போல் சுதாகர், ஏதாவது பொய் சொல்லி கோபி காதில் பூ சுத்தி நம்ப வைத்து விடுவார். இதில் கோபி தற்போது பாக்யாவுக்கு துணையாக நின்றாலும் ஒன்னும் புரோஜனம் இல்லை என்று சொல்வதற்கு ஏற்ப பாத்தியாவிடமிருந்து சுதாகர் பிடுங்கி விட்டார்.

இருந்தாலும் துவண்டு போகாமல் பாக்கிய அடுத்து முன்னேற போகும்பொழுது கோபி சப்போர்ட் செய்து பாக்கியாவின் வளர்ச்சிக்கு கை கொடுப்பார்.