பாண்டியனின் பணத்தை ஆட்டைய போட்டு மாமனாரிடம் கொடுக்கும் செந்தில்.. காதலித்த விஷயத்தை போட்டு உடைத்து அரசி

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் செந்தில் இடம் வங்கிக்கு சென்று 15 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துட்டு வா. அந்த பணத்தை வைத்து அரசிக்கு கொடுக்க வேண்டிய காரை வாங்கிவிடலாம் என்று சொல்லி செந்தில் இடம் பொறுப்பை ஒப்படைக்கிறார். செந்தில் பேங்க்கு பணத்தை எடுக்க போகும் பொழுது மீனாவின் அப்பா செந்திலுக்கு போன் பண்ணி உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்று ஒரு ரெஸ்டாரண்டுக்கு கூப்பிடுகிறார்.

அப்படி போன பொழுது அரசாங்க உத்தியோகத்தில் சேர வேண்டும் என்றால் 10 லட்ச ரூபாய் பணம் கேட்டேன் என்ன ஆச்சு என்று கேட்கிறார். அப்பொழுது செந்தில் அந்த பணத்தை நான் ரெடி பண்ணிக் கொண்டுதான் இருக்கிறேன். கொஞ்சம் டைம் கொடுங்கள் என கேட்கிறார். உடனே இன்னொரு நபர் வந்து பணம் கொடுத்தால் அந்த வேலை ஈசியாக கிடைத்து விடும். அதன் பிறகு நீங்க அரசாங்க ஊழியராக மாறிவிடுவார்கள் என்று சொல்லி செந்திலுக்கு ஆசை வார்த்தை காட்டி விட்டார்.

செந்திலும் சரி என்று சொல்லி பேங்க்கு போய் பணத்தை எடுத்து விட்டார். அந்த நேரத்தில் பாண்டியன் செந்திலுக்கு போன் பண்ணி பணத்தை எடுத்தாச்சா என்று கேட்கிறார். அதற்கு செந்தில் பணத்தை எடுத்து எண்ணிப் பார்த்துட்டேன் இப்பொழுது கடைக்கு கொண்டு வந்து விடுவேன் என்று சொல்கிறார். அப்படி போகும் பொழுது அதே ரெஸ்டாரண்டில் மாமனாரும் அந்த நபரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து செந்தில் கடைக்குள் நுழைகிறார்.

உடனே பேராசையால் செந்தில் வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொடுப்பதற்கு தயாராகி விட்டார். அப்படி ஒரு வேலை அந்த பணத்தை மாமனாரிடம் கொடுத்துவிட்டு குடும்பத்தில் இருப்பவர்களிடம் தொலைந்து போய்விட்டது என்று சொன்னாலும் சொல்வார் போல. அடுத்ததாக அரசி சரியாக போனில் பேச மாட்டியிருக்கிறார் என்று கவலைப்பட்ட சதீஷ் அவர்கள் இருக்கும் ஊருக்கே நேரடியாக போய்விட்டார்.

உடனே மீனா என்ன திடீரென்று நேரடியாக வந்து விட்டீர்கள் என்று கேட்ட பொழுது அரசியை பார்த்து கொஞ்சம் பேச வேண்டும் என்று சொல்கிறார். அதற்கு மீனாவும் சரி என்று சொல்லிய நிலையில் வீட்டிற்குள் அரசி மற்றும் சதீஷ் பேசிக் கொள்கிறார்கள். அப்பொழுது சதீஷ் என்னை உனக்கு பிடிக்கவில்லையா, வீட்டில் கட்டாய கல்யாணம் பண்ணி வைக்கிறார்களா? என்னிடம் சரியாக பேசமாட்டீங்க என்ன காரணம் என்று சொல்லு என கேட்கிறார்.

அதற்கு அரசி எங்க வீட்டிற்க்கு எதிர்க்கே இருக்கும் என்னுடைய அம்மாவின் அண்ணன் பையன் குமரவேலுவை கல்யாணம் பண்ணினால் 30 வருஷ பகை தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில் அவன் கூட பழகினேன். ஆனால் அது வீட்டுக்கு தெரிந்து போய் பிரச்சனையாகி விட்டது. அதனால் தான் அப்பா உடனடியாக கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று உங்களுடன் சம்பந்தம் பேசினார்கள். இதனால் உடனடியாக என் மனசை என்னால் மாற்றிக் கொள்ளவும் முடியவில்லை அப்பா பேச்சை மீறவும் முடியவில்லை என்று எல்லா விஷயத்தையும் போட்டு உடைத்து விட்டார்.

இதைக்கேட்ட சதீஷ் என்ன சொல்வது என்று தெரியாமல் ஒண்ணுமே சொல்லாமல் அங்கு இருந்து கிளம்பி விடுகிறார். பிறகு சதீஷின் முகம் வாடி போனதை பார்த்த மீனா, அரசிடம் என்ன ஆச்சு என்று கேட்கிறார். அதற்கு அரசி குமரவேலு பற்றிய எல்லா விஷயத்தையும் நான் சொல்லிவிட்டேன் என்று சொல்லிய நிலையில் மீனா அவ்வளவுதான் போச்சு இந்த சதீஷ் நீ சொன்ன எல்லா விஷயத்தையும் வீட்டில் சொல்லி மாமா காதுக்கு போய் மறுபடியும் ஏதாவது பிரச்சனையாக போகிறது என்று புலம்ப ஆரம்பித்து விட்டார். இவ்வளவு பிரச்சனைக்கும் நடுவில் எப்படி அரசி சதீஷ் கல்யாணம் நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.