ஓட ஓட விரட்டிய சன் டிவி! விஜய் டிவி சீரியல்களின் TRP நிலைமை என்ன?
2025-ம் ஆண்டின் 47-வது வார TRP நிலவரம், சின்னத்திரையில் சன் டிவியின் ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்துள்ளது. விஜய் டிவி நகரப்புறங்களில் வலுவாக இருந்தாலும், ஒட்டுமொத்த போட்டியில் சன் டிவியின் கிராமப்புற மவுசு அவர்களை முன்னணியில் நிறுத்துகிறது.
தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு இருக்கும் மவுசு வேறு எதற்கும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சினிமா படங்களை விடவும், சீரியல் கதாபாத்திரங்களை தங்கள் வீட்டு உறுப்பினர்களாக நினைத்து ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இதனால் எந்த சேனலின் சீரியல் முதலிடம் பிடிக்கும் என்ற போட்டி தயாரிப்பாளர்கள் மத்தியில் மட்டுமல்ல, ரசிகர்கள் மத்தியிலும் எப்போதும் விறுவிறுப்பாகவே இருக்கும்.
இந்த போட்டியின் முடிவை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருப்பது TRP எந்த சீரியலை மக்கள் அதிகமாகப் பார்க்கிறார்கள் என்பதை இந்த புள்ளிகள் தெளிவாகக் காட்டிவிடும். அந்த வகையில், 2025-ம் ஆண்டின் 47-வது வாரத்திற்கான டாப் 5 தமிழ் சீரியல்களின் டிஆர்பி நிலவரம் தற்போது வெளியாகி உள்ளது. இந்த வார முடிவுகள் விஜய் டிவி ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியையும், சன் டிவி ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியையும் தந்துள்ளதுன்தங்கியுள்ளன.
மூன்று முடிச்சு
விறுவிறுப்பான கதைக்களத்துடன் சென்று கொண்டிருக்கும் 'மூன்று முடிச்சு' சீரியல் இந்த வாரமும் தனது முதல் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஸ்வாதி கொண்டே ஹீரோயினாக நடிக்கும் இந்த தொடர், கடந்த வாரம் 9.61 புள்ளிகள் பெற்றிருந்த நிலையில், இந்த வாரம் 9.65 புள்ளிகளுடன் கம்பீரமாக முதலிடத்தில் உள்ளது.
சிங்கப்பெண்ணே
மனிஷா மகேஷ் நடிப்பில் ஒளிபரப்பாகும் 'சிங்கப்பெண்ணே' சீரியல் மீண்டும் தனது பழைய வேகத்திற்குத் திரும்பியுள்ளது. கடந்த வாரம் 8.94 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் இருந்த இந்த தொடர், இந்த வாரம் 9.19 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி உள்ளது.
மருமகள்
பிக் பாஸ் பிரபலம் கேப்ரியல்லா நடிப்பில் வரும் 'மருமகள்' சீரியல் இந்த வாரம் மிகப் பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. ஆதிரை கதாபாத்திரத்தின் விறுவிறுப்பான திருப்பங்களால், கடந்த வாரம் 8.35 புள்ளிகளுடன் 7-ம் இடத்தில் இருந்த இந்த தொடர், இந்த வாரம் 8.55 புள்ளிகளுடன் 4-ம் இடத்திற்கு தாவி உள்ளது.
எதிர்நீச்சல்
திருச்செல்வம் இயக்கத்தில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' தொடர், கதைக்களத்தில் ஏற்பட்டுள்ள சுவாரஸ்யங்களால் மீண்டும் டாப் லிஸ்டில் முன்னேறி வருகிறது. கடந்த வாரம் 8.33 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருந்த இந்த தொடர், இந்த வாரம் 8.44 புள்ளிகளுடன் 5-ம் இடத்தைப் பிடித்துள்ளது.
கயல்
ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், 'கயல்' சீரியல் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் ஜோடியாக நடிக்கும் இந்த தொடர், கதைக்களம் மாறிய பின்னர் தடுமாறி வருகிறது. கடந்த வாரம் 9.10 புள்ளிகளுடன் 2-ம் இடத்தில் இருந்த இந்த சீரியல், இந்த வாரம் 9.09 புள்ளிகளுடன் 10-வது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
