Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இரண்டு ஹோட்டலையும் இழந்த பாக்கியா அடுத்து என்ன பண்ணுவது, இனி எப்படி கடனை அடைப்பது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது தானாக தலையை வந்து சுதாகர் கொடுத்து மாட்டிக் கொண்டார்.
அதாவது பேச்சுவார்த்தையில் உங்க ஹோட்டலுக்கான பணத்தை நான் திருப்பி தந்து விடுகிறேன் என்று பாக்கியாவிடம் சொன்னார். உடனே பாக்யாவும் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டு நீங்க சொல்வதும் சரிதான் என்னுடைய ஹோட்டலை எதற்கு நான் தானமாக உங்களுக்கு கொடுக்க வேண்டும்.
அதற்கான பணமும் எனக்கு கிடைத்துவிட்டால் நம்மளுடைய இரண்டு பேருடைய ரிலேஷன்ஷிப்பும் சுமோகமாக முடிந்துவிடும் என்று சொல்லிவிட்டார். இதனை எதிர்பார்க்காத சுதாகர் பாக்யா கேட்க போகும் பணத்தை விட கம்மியாக தான் கொடுக்க வேண்டும் என்று முடிவு பண்ணி விட்டார்.
அந்த வகையில் சுதாகரின் ஆபீசுக்கு பணத்தை கேட்க போன பாக்யாவிற்கு ஒரு சின்ன ஏமாற்றம் ஏற்பட்டு விட்டது. அதாவது ஹோட்டலை எவ்வளவு பணம் கொடுத்து வாங்கினது, எவ்வளவு செலவு பண்ணியது போன்ற விவரங்களை சுதாகரிடம் கொடுத்து கிட்டத்தட்ட 60 லட்ச ரூபாய் பணம் வேண்டும் என்று டிமாண்ட் பண்ணினார்.
ஆனால் சுதாகர் அவ்வளவு பணம் எல்லாம் கொடுக்க முடியாது 20 லட்ச ரூபாய் பணம் என்றால் தருகிறேன் என்று சொன்னார். ஆனால் பாக்யா புத்திசாலித்தனமாக சுதாகர் பேசி மிரட்டி கிட்டத்தட்ட ஒரு 50 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டார்.
அத்துடன் அந்த பணத்தை வைத்து பேங்குக்கு அடைக்க வேண்டிய கடனை அடைத்து விட்டு வீட்டிற்கு வந்து பாக்யா ஹோட்டலில் வேலை பார்க்கும் ஆட்களையும் வரச் சொல்லி அவர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தையும் கொடுத்துவிட்டார். இப்படி புத்திசாலித்தனமாக நடந்து கொண்ட பாக்யாவை பார்த்து கோபி, சூப்பர் என்று சொல்லி பாராட்ட ஆரம்பித்து விட்டார்.
ஆனால் பாக்கியா பண்ணுவது எதுவுமே சரியில்லை என்று ஈஸ்வரி சொன்ன பொழுது கோபி, பாக்கியா எது செஞ்சாலும் சரியாகத்தான் இருக்கும். அதனால் பாக்யாவை எதுவும் சொல்ல வேண்டாம் அவளுக்கு என்ன தோணுதோ அதுவே பண்ணட்டும் என்று பாக்யாவிற்கு சப்போர்ட் பண்ணும் விதமாக பேசி ஈஸ்வரின் வாயை அடைத்து விட்டார். அந்த வகையில் புத்திசாலித்தனமாக நடந்து கொண்ட பாக்யாவால் பிரச்சனை ஓரளவுக்கு முடிவுக்கு வந்துவிட்டது.