1. Home
  2. தொலைக்காட்சி

விஜய் டிவி மாதிரி 2 சீரியலை மகா சங்கமமாக கொண்டு வரும் சன் டிவி.. நந்தினிக்கு சப்போர்ட்டாக ஆதிரை

விஜய் டிவி மாதிரி 2 சீரியலை மகா சங்கமமாக கொண்டு வரும் சன் டிவி.. நந்தினிக்கு சப்போர்ட்டாக ஆதிரை

Sun Tv Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் சில நேரங்களில் டல் அடிக்கிற மாதிரி இருந்தால் பக்கத்தில் வரும் இரண்டு சீரியல்களை ஒன்றாக இணைக்கும் விதமாக மகா சங்கமமாக கொண்டு வருவார்கள். இது பலமுறை டிஆர்பி ரேட்டிங்க்கு கை கொடுத்திருக்கிறது. இதே விஷயத்தை தற்போது சன் டிவியும் செய்ய தயாராகிவிட்டது.

அந்த வகையில் ப்ரைம் டைமிங்கில் ஒளிபரப்பாகி வரும் இரண்டு சீரியல்கள் மகா சங்கமமாக வரப்போகிறது. அதுவும் டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5 இடத்தை பிடித்த சீரியல் தான். அதாவது மூன்று முடிச்சு சீரியல், மருமகள் சீரியலும் ஒன்றாக இணைந்து சன் டிவி கொடுக்கப் போகிறது.

இதில் மாமியாரிடம் மாட்டிக் கொண்டு அவஸ்தைப்படும் நந்தினிக்கு சப்போர்ட் பண்ணும் விதமாக ஆதிரை களத்தில் இறங்க போகிறார். அதே மாதிரி பணம் விஷயத்தில் ஆதிரை தன்னை ஏமாற்றி விட்டதாக கோபத்தில் இருக்கும் பிரபுவை சாந்த படுத்த சூர்யா களமிறங்க போகிறார்.

இதையெல்லாம் தாண்டி நந்தினி மற்றும் சூர்யா மனசில் இருக்கும் காதலை வெளிப்படுத்தும் விதமாக ஆதிரை மற்றும் பிரபு இணைந்து தரமான சம்பவத்தை செய்ய போகிறார்கள். இதற்கு தான் காத்துக் கொண்டிருந்தோம் என்பதற்கு ஏற்ப சூர்யா நந்தினி கெமிஸ்ட்ரி இனி டாப்பில் போகப் போகிறது.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.