சன் டிவி பிரபலத்தை தட்டி தூக்கிய விஜய் டிவி.. டிஆர்பிக்காக போட்ட பிளான்

Vijay Tv: விஜய் டிவியின் டிஆர்பி இப்போது சமீபகாலமாக சரிவை சந்தித்து வருகிறது. ஆரம்பத்தில் புதுவிதமான நிகழ்ச்சியால் மிகக் குறுகிய காலத்திலேயே ஒரு நல்ல நிலையான இடத்தை பிடித்திருந்தது. அதோடு சீரியல்களும் வரவேற்பை பெற்றது.

ஆனால் சன் டிவியில் சிங்க பெண்ணே, கயல், எதிர்நீச்சல் 2 போன்ற தொடர்கள் நல்ல ரேட்டிங் பெறுவதால் விஜய் டிவி பின்னடைவை சந்தித்திருக்கிறது. இதனால் விஜய் டிவி, சன் டிவி பிரபலத்தை தட்டி தூக்கி இருக்கிறது.

விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். ஆனால் கடந்த சீசனில் எக்கச்சக்க பிரச்சனையை சந்தித்தது. ஆரம்பத்தில் வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டார்.

விஜய் டிவிக்கு வந்த சன் டிவி பிரபலம்

அதன் பிறகு மணிமேகலை மற்றும் பிரியங்கா இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் பிரியங்கா டைட்டில் வின்னர் ஆனது பலரின் எதிர்ப்பை சம்பாதித்தது. இப்படி இருக்கும் சூழலில் குக் வித் கோமாளி ஆறாவது சீசனில் வெங்கடேஷ் பட் மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் உடன் மூன்றாவது ஜட்ஜ் இணைந்துள்ளார்.

அவர் சன் டிவியில் ஒளிபரப்பான மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்ற கௌஷிக் சங்கர் தான். குக் வித் கோமாளி நிகழ்ச்சியை சுவாரசியமாக்குவதற்காக சன் டிவியிலிருந்து கௌஷிக் விஜய் டிவிக்கு வரவழைக்கப்பட்டுள்ளார்.

ஆனாலும் வெங்கடேஷ் பட் அளவுக்கு யாராலும் வர முடியாது என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் பெயர் விரைவில் வெளியாக உள்ளது.