1. Home
  2. தொலைக்காட்சி

மொத்த சேனலையும் தூக்கி சாப்பிட்ட சன் டிவி சீரியல்.. 7 விருதுகளை அள்ளிக் கொடுத்த விகடன்

மொத்த சேனலையும் தூக்கி சாப்பிட்ட சன் டிவி சீரியல்.. 7 விருதுகளை அள்ளிக் கொடுத்த விகடன்

Sun tv Serial: திரையரங்குகளுக்கு எப்பவாவது போய் ஒரு படத்தை பார்ப்பதை விட தினமும் வீட்டில் இருந்தபடியே சின்ன திரையில் வரும் சீரியலை பார்த்து நேரத்தை பொழுது போக்குபவர்கள் தான் அதிகம். அந்த வகையில் மக்கள் மனதில் எப்பொழுதுமே சீரியலுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அதனால் தான் தற்போது குடும்பத்துடன் பார்க்கும் அளவிற்கு சீரியல்கள் அதிகரித்து விட்டது.

இதனால் போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரு சேனல்களும் புதுப்புது நாடகத்தை இறக்குகிறார்கள். ஆனாலும் சீரியல் என்றால் சன் டிவி தான் என்று சொல்வதற்கு ஏற்ப மக்கள் மனதில் சிம்மாசனமாக இருந்து வருகிறது. அப்படி சன் டிவியில் கிட்டத்தட்ட 15 நாடகத்துக்கு மேல் ஒளிபரப்பாகி வந்தாலும் சில சீரியல்கள் தான் டிஆர்பி ரேட்டிங்கில் அதிக இடத்தை பிடிக்கிறது.

சிறந்த சீரியலுக்கான விருதைப் பெற்ற இயக்குனர்

எந்த சீரியல்களை மக்கள் அதிகமாக பார்க்கிறார்களோ அதுவே டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடிக்கும். அதன் கணக்குப்படி ஆனந்த விகடன் ஒவ்வொரு வருடமும் மக்கள் போடும் ஓட்டின் அடிப்படையில் சீரியல் மற்றும் கதாபாத்திரங்களுக்கு விருதுகளை கொடுத்து வருகிறது. அப்படி 2023 ஆம் ஆண்டுக்கான சின்னத்திரை விருதுகளை வழங்கி இருக்கிறார்கள்.

அதில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு சீரியல் மட்டுமே 7 விருதுகளை வாங்கி குவித்து இருக்கிறது. இந்த ஒரு சீரியல் தான் மொத்த சேனலையும் ஆக்கிரமித்து இருக்கிறது என்று சொல்லும் அளவிற்கு கொடிகட்டி பறந்தது. அப்படி அது எந்த சீரியல் என்று கேட்டால் சமீபத்தில் அவசர அவசரமாக முடிந்து போன எதிர்நீச்சல் சீரியல்தான்.

பெஸ்ட் சப்போர்ட்டிங் ஆக்ட்ரஸ் ஈஸ்வரி என்கிற கனிகா, சிறந்த நகைச்சுவை நடிகை விருதை பெற்ற நந்தினி என்கிற ஹரிபிரியா, சிறந்த ஒளிப்பதிவு சந்தானம், சிறந்த சீரியல் எதிர்நீச்சல், சிறந்த இயக்குனர் திருச்செல்வம், சிறந்த நகைச்சுவை நடிகர் கரிகாலன் என்கிற விமல் குமார்.

மொத்த சேனலையும் தூக்கி சாப்பிட்ட சன் டிவி சீரியல்.. 7 விருதுகளை அள்ளிக் கொடுத்த விகடன்
best serial

இப்படி எதிர்நீச்சல் சீரியல் மட்டுமே ஆறு விருதுகளை பெற்றிருக்கிறது. இது மட்டுமல்ல 2023 ஆம் ஆண்டு அதிக அளவில் பிரபலமாகி பேசப்பட்ட ஒரே ஒரு நடிகர் மாரிமுத்து என்கிற குணசேகரன் என்கிற கதாபாத்திரத்திற்கு டெலிவிஷன் டாக் ஆஃப் தி இயர் (Television talk of the year) என்கிற விருது கிடைத்திருக்கிறது. இப்படி கடந்தாண்டு கொடி கட்டி பறந்த எதிர்நீச்சல் சீரியல் இந்த ஆண்டு திடீரென்று முடிந்த போனது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்திருக்கிறது.

அந்த வகையில் கூடிய விரைவில் மறுபடியும் ஒரு நல்ல கதையுடன் திருச்செல்வம் வருவார் என்று மக்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.