அண்ணா : கேள்வி குறியான வீரா வாழ்க்கை.. அண்ணன் எடுக்க போகும் முடிவு!

Anna : தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியலில் ஒன்று அண்ணா. ஏகப்பட்ட குழப்பத்துடன் நகர்கிறது திருமணம். திருமணத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் என்ன என்பதை இந்த பகுதியில் பார்க்கலாம்.

சிவபாலன் பல இன்னல்களைக் கடந்து வருகின்றான். இந்நிலையில் திருமணம் நடக்கப் போகிறது ரத்னாவின் கழுத்தில் அறிவு தாலி கட்டி விடுகிறான். ஆனால் இன்னும் டிக் டிக் நிமிடங்கள் குறையாமல் தான் இருக்கிறது.

வீராவுக்கு தாலி கட்டும் பொழுது சிவபாலன் மண்டபத்தில் ஓடி வருகிறான். ஏலே சிவபாலன் என்று கத்துகிறாள் அவனுடைய அம்மா. சொந்த சகோதரன் என்று கூட பாராமல் தள்ளிவிட்டு, அப்பா அம்மா தடுத்து நிறுத்தியும் வீராவின் கழுத்தில் தாலியை கட்டி விடுகிறான்.

இது யாரும் எதிர்பாராத ட்விஸ்ட் தான் இந்நிலையில் சிவபாலன் செய்த செயல் அனைவரையும் ஆச்சர்யபடுத்தியது. இந்நிலையில் அறிவு சட்டையின் மீது கை வைத்து கோவத்துடன் இழுத்து செல்கின்றனர். பதட்டத்துடன் நிற்கிறான் அறிவு.

கோவம் அடைந்த சண்முகம் எங்க வீட்டு மாப்பிள்ளை மீது எதுக்கு கை வைக்கிறீங்க என்று கத்துகிறான். இன்னொரு பக்கம் அறிவுவை கைது செய்தாக வேண்டும் என்று அடம் பிடித்து நிற்கின்றனர். இன்னொரு பக்கம் வீரா கழுத்தில் தாலியை சிவப்பாலன் கட்டியது மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அடுத்து சண்முகம் என்ன செய்ய போகிறான்? சிவபாலன் கொடுத்த வாழ்க்கையை வீரா? குடும்பங்கள் எடுக்க போகும் முடிவு என்ன? இதை நோக்கி அடுத்து கட்டம் என்ன நடக்க போகிறது என்பதை அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.