ரஜினி ஜெயிலர் படத்தால் பழையபடி வரும் ஹீரோ வாய்ப்பு.. ஜெட் வேகத்தில் சும்மா ஸ்விங்ன்னு ஏரிய சம்பளம்

Jailer : ஜெயிலர் படம் வெளியாகி ஒரு வாரத்திற்கு மேலாகியும் இன்னும் ஹைப் குறையவில்லை. திரையரங்குகள் எல்லாமே ஹவுஸ்ஃபுல்லாக தான் இருந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு ரஜினியின் படம் வசூலை வாரி குவித்து கொண்டிருக்கிறது. ஜெயிலர் படத்தால் பல பிரபலங்கள் மீண்டும் தங்களது மார்க்கெட்டை தக்க வைத்துள்ளனர்.

சொல்லப்போனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே ஜெயிலர் படத்தின் மூலம் தனது மார்க்கெட்டை மீண்டும் பிடித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அதேபோல் கதாநாயகனாக நடித்த வசந்த் ரவி ஜெயிலர் படத்தின் மூலம் ரசிகர்களின் பார்வையை பெற்றுள்ளார். அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறதாம்.

மற்றொருபுறம் ஏற்கனவே இரண்டு, மூன்று படங்களில் ஹீரோவாக நடித்து அதன் பின் வாய்ப்பு நிராகரிக்கப்பட்டதால் கேரக்டர் ரோலில் ஒருவர் நடித்துக் கொண்டிருந்தார். ஜெயிலர் ரிலீஸ்க்கு பின்பு இப்போது படங்களில் அவருக்கு ஹீரோ வாய்ப்பு வந்திருக்கிறதாம்.

அதில் இரண்டு படங்களின் கதை பிடித்திருந்ததால் உடனே ஓகே சொல்லிவிட்டாராம். அதாவது ஜெயிலர் படத்தில் ப்ளாஸ்ட் மோகனாக நடித்து ரசிகர்களின் கவனம் பெற்றவர் தான் சுனில். புஷ்பா படத்தில் மங்கலம் சீனு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் தமிழில் சில படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

சந்தானம் நடிப்பில் வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சுனில் தான் ஹீரோவாக நடித்தார். சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான மாவீரன் படத்தில் நடித்த நிலையில் புல்லட் என்ற படத்தில் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார். இப்போது ஹீரோவாக சில படங்களில் கமிட்டாகி இருக்கிறார்.

ஜெயிலர் படத்தால் ஜெட் வேகத்தில் சம்பளத்தையும் ஏற்றி இருக்கிறாராம். இனி தான் தன்னுடைய ஆட்டமே ஆரம்பம் என்று நிற்க கூட நேரம் இல்லாத அளவுக்கு அடுத்தடுத்த படங்கள் சுனிலுக்கு குவிந்து வருகிறது. ரஜினியால் இப்போது ஏற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார் நடிகர் சுனில்.