Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், சோழனிடமிருந்து விவாகரத்து வாங்கி நினைத்தபடி தனியாக ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நிலா முடிவெடுத்துவிட்டார். அதன்படி லாயரை சந்தித்த நிலாவிற்கு சோழனை விவாகரத்து பண்ண வேண்டும் என்றால் ஆதார் கார்டு வேண்டும் என்பதால் அதை ஃபோனில் இருக்கா என்று தேடிப் பார்க்கிறார்.
அப்பொழுது சோழன் என்ன பண்ணுறீங்க என்று கேட்கும் பொழுது நாம் இரண்டு பேரும் விவாகரத்து பண்ண வேண்டும். அதற்கு ஆதார் கார்டு இருக்கா என்று செக் பண்ணுகிறேன் என சொல்கிறார். உடனே சோழன், இப்போதைக்கு நிலா ஓய மாட்டாள் போல, விவாகரத்து வாங்கி தீர வேண்டும் என்று முடிவோடுதான் இருக்கிறாள் என மனசுக்குள் புலம்புகிறார்.
அந்த நேரத்தில் கார்த்திகா, சேரனை பார்த்து பேச வேண்டும் என்று வீட்டிற்கு வருகிறார். அப்பொழுது அங்கே சோழன் மற்றும் நிலா இருப்பதால் நிலா, கார்த்திகாவிடம் பேசுகிறார். வழக்கம் போல் கார்த்திகா அழுது கொண்டே சேரன் மாமா இல்லையா என்று கேட்கிறார். அதற்கு நிலா யாருமே இல்லை என்ன விஷயம் என்று கேட்கும் பொழுது எனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து விட்டார்கள் என சொல்கிறார்.
உடனே நிலா, அப்படி என்றால் கல்யாணம் பண்ணிக்கோங்க. அதுதான் உங்களுக்கும் இந்த குடும்பத்திற்கும் நல்லது என்று சொல்கிறார். அதற்கு கார்த்திகா, சேரன் மாமாவை நான் எந்த அளவுக்கு மனதில் வைத்திருக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியாது. எனக்கு வேறு யாருடன் திருமணம் ஆனாலும் என் மனதில் சேரன் மாமா தான் இருப்பாங்க என்று சொல்கிறார்.
இதை கேட்டதும் நிலா, முதலில் உங்களுக்கு என்ன வேண்டும் என்று முடிவு பண்ணி அதில் உறுதியாக இருங்கள். தேவையில்லாமல் நீங்களும் குழம்பி இந்த வீட்டையும் கஷ்டப்படுத்தாதீங்க என்று அட்வைஸ் பண்ணி விடுகிறார். இதையெல்லாம் பார்த்த சோழன், இந்த வீட்டிற்கு ஏற்ற மகளாகவும் பொறுப்பானவளாகவும் இருக்கிறாய் உன்னை எப்படி நான் விவாகரத்து பண்ண முடியும் என்று சொல்லி பீல் பண்ணுகிறார்.
ஆனாலும் நிலா எடுத்த முடிவு தவறு என்பதை நிரூபிக்கும் விதமாக சோழன் ஒவ்வொரு விஷயங்களையும் பார்த்து பார்த்து பண்ணுகிறார். இதையெல்லாம் தாண்டி நடேசன், அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது வீட்டிற்கு புரோட்டா வாங்கிட்டு வந்து அட்டகாசம் பண்ணி சாப்பிடுகிறார். இதை பார்த்ததும் நிலாவிற்கு கொமட்டலும் அருவருப்பாகவும் வந்துவிட்டது.
உடனே அங்கிருந்து நிலா எழுந்து போய் விடுகிறார், நிலாவின் மனநிலை என்னவென்று தெரியாமல் நடேசன் வேற அவ்வப்போது இந்த மாதிரி ஏதாவது கூத்து பண்ணி கடுப்பேத்தி வருகிறார். அடுத்ததாக சோழன் மற்றும் நிலாவுக்கு போலீஸ் ஸ்டேஷனில் கல்யாணம் பண்ணி வைத்த ஒரு போலீசை தனியாக போன் பண்ணி கூப்பிடுகிறார். அப்படி கூப்பிட்டு பேசிய பொழுது நிலா, அம்மா அப்பா அண்ணி என அனைவரும் நிலாவை சென்டிமென்டாக பேசி என்னிடம் இருந்து பிரிக்க பார்க்கிறார்கள்.
நிலாவும் அந்த செண்டிமெண்ட்க்கு மயங்கி என்னை விட்டு போவதற்கு விவாகரத்து பண்ணலாம் என முடிவு பண்ணி விட்டார். அதனால் இதை தடுக்கும் விதமாக நீங்க தான் எனக்கு உதவி பண்ண வேண்டும் என்று சோழன், போலீஸிடம் உதவி கேட்கிறார். போலீசும் சரி என்று சொல்லிய நிலையில் நிலாவுக்கு போன் பண்ணி சோழன் உன்னை நல்லா பார்த்துக் கொள்கிறானா, அந்த வீட்டில் வேறு ஏதாவது பிரச்சனையா என்று கேட்கிறார்.
அதற்கு நிலா எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை, நான் நல்லா தான் இருக்கிறேன் என்று சொல்கிறார். உடனே அந்த போலீஸ் அப்படி என்றால் எதற்கு நீ விவாகரத்து வேண்டும் என்று வக்கீலை சந்தித்து பேசினாய் என கேள்வி கேட்கிறார். இதனால் என்ன சொல்வது என்று தெரியாமல் நிலா முழித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் நிலா எப்படியும் அந்த வீட்டை விட்டும் சோழனை விட்டும் பிரிய போவதே இல்லை.