சன் டிவி பிரேம் டைம் சீரியலில் ஜோடி மாறவில்லை.. திடீர் திருப்பமாக நடந்த கல்யாணம், வாழ்த்து சொல்லிய தம்பி

Sun Tv Serial: சீரியலைப் பொறுத்தவரை மிகவும் விறுவிறுப்பாகவும், பார்ப்பவர்களுக்கு டுவிஸ்ட் கொடுக்கும் விதமாக இருப்பது நாடகத்தில் நடக்கும் ஜோடிகளின் கல்யாணம் தான். ஏனென்றால் எதிர்பார்ப்பையும் தாண்டி திடீரென்று ஜோடிகளுக்கு வேறு ஒருவருடன் திருமணத்தை பண்ணி வைத்து ஒரு திருப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்து விடுவார்கள்.

அப்படித்தான் தற்போது சன் டிவியில் பிரேம் டைமிங் சீரியலில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சீரியலில் யார் யாருடன் சேரப் போகிறார் என்பது கடந்த ஒரு வாரமாக விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது வந்த புகைப்படத்தின்படி ஜோடி எல்லாம் மாறவில்லை. எதிர்பார்த்தபடியே அவர்களுக்கு கல்யாணம் நடந்திருக்கிறது என்பது தெரிகிறது.

அதாவது அன்னம் சீரியலில் அன்னத்துக்கும் சரவணனுக்கும் கல்யாணம் ஏற்பாடு பண்ணி வைத்திருந்தார்கள். ஆனால் சரவணன் திடீரென்று அந்த மண்டபத்தை விட்டு வெளியேறி தம்பி கார்த்திக்கு போன் பண்ணி எனக்கு அன்னத்தை பிடிக்கவில்லை. அம்மா சொன்ன டிராமா படி நான் இதுவரை நடித்து வந்தேன். இனி எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லிவிட்டார்.

இதனால் மண்டபத்தில் அன்னம் ஏமாற்றத்துடன் இருந்த நிலையில் அன்னத்தின் மாமாவுக்கு வேற வழி இல்லாமல் சரவணனுக்கு பதிலாக கார்த்தி காலில் விழுந்து கார்த்திகை கல்யாணம் பண்ணி வைப்பதற்கு முயற்சி எடுத்தார். கார்த்தியும் அப்பா பேச்சையும் மீற முடியவில்லை அன்னத்தின் வாழ்க்கையையும் அப்படியே விட முடியவில்லை என்பதற்காக மணமேடையில் போயி அன்னத்தின் பக்கத்தில் இருந்தார்.

annam (1)
annam (1)

ஆனால் அந்த நேரத்தில் கார்த்திக்கின் காதலி ரம்யா போன் பண்ணியதால் கார்த்திக் மணமேடையை விட்டு எழுந்துப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இணையத்தில் வெளிவந்த புகைப்படம் என்னவென்றால் அன்னம் மற்றும் சரவணன் மாலையும் கழுத்துமாக நிற்பது போலும் அன்னம் கழுத்தில் தாலி இருப்பது போல் வந்திருக்கிறது.

அத்துடன் அந்த புகைப்படத்திற்கு கீழ் சரவணனின் தம்பியாக நடித்த வரும் கார்த்திக் வாழ்த்துக்கள் அண்ணன் மற்றும் அன்னம் என்று போட்டிருக்கிறார். அந்த வகையில் அன்னம் மற்றும் சரவணனுக்கு கல்யாணம் நடந்து விட்டது. இனி ரம்யா ஆசைப்பட்ட மாதிரி கார்த்திக்குடன் கல்யாணம் நடந்து விடும்.