பாக்யாவின் மகனுக்கு விவாகரத்து நோட்டீசை அனுப்பிய மருமகள்.. வில்லனாக மாறிய அப்பா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா அவருடைய ஆசைப்படி தற்போது சொந்தக் கல்லில் முன்னேறி ஜெயித்துக் காட்டி விட்டார். இதனைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக ரெஸ்டாரன்ட் வச்சு பிசினஸிலும் ஜெயிக்கப் போகிறார். இந்நிலையில் தற்போது பாக்யாவிற்கு பெரிய சவாலாக இருப்பது இரண்டு மகன்களின் வாழ்க்கையை சரி செய்ய வேண்டும் என்பதுதான்.

அதிலும் அமிர்தாவின் முன்னாள் கணவரைப் பற்றிய விஷயத்தை வீட்டில் இருப்பவர்களிடம் கூறி ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று பாக்யா முயற்சி எடுத்து வருகிறார்.அப்பொழுது வீட்டில் அனைவரும் ஒன்றாக கூடி இருக்கும் நேரத்தில் பாக்கியா கணேசனை பற்றி சொல்ல வருகிறார். ஆனால் அதற்குள் சொல்ல விடாமல் ஒரு விஷயம் தடுத்து விட்டது.

அதாவது பாக்யா சொல்ல வரும்பொழுது செழியனுக்கு, ஜெனி விஷயமாக ஏதாவது இருக்குமோ என்று ஒரு பயம் வந்துவிட்டது. இதைப்பற்றி பாக்கியாவிடம் செழியன் கேட்ட பொழுது இது உன்னோட விஷயம் கிடையாது என்று கூறிவிட்டார். ஆனால் கொஞ்சம் கூட எதிர்பாராத விதமாக செழியனுக்கு ஒரு அதிர்ச்சியான விஷயம் நடந்து விட்டது.

என்னவென்றால் ஜெனி இடம் இருந்து விவாகரத்து நோட்டீஸ் வந்துவிட்டது. இதை பார்த்த செழியன் மிகவும் ஷாக் ஆகி அப்படியே நொறுங்கிப் போய்விட்டார். இதனால் பாக்கியா அவரை சமாதானப்படுத்துவதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தியதால் அமிர்தாவின் முன்னாள் கணவரை பற்றி சொல்ல முடியாமல் போய்விட்டது.

இருந்தாலும் செழியனுக்கு ஆறுதல் கூறும் விதமாக கோபி மற்றும் ராதிகா பேசுகிறார். இதற்கிடையில் இந்த விவாகரத்து விஷயத்தை கண்டிப்பாக ஜெனி எடுத்திருக்க மாட்டார். இதற்கு முழுக்க முழுக்க காரணம் ஜெனியின் அப்பா தான் வில்லங்க தனமாக யோசித்து செழியனுக்கு விவாகரத்து நோட்டீசை அனுப்பி விட்டிருப்பார்.

கண்டிப்பா ஜெனிக்கும் விவாகரத்து நோட்டீஸ்க்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. எனக்கு செழியன் மேல் கோபம் தான் இருக்கு தவிர அவரைப் பிரிய வேண்டும் என்று நான் நினைக்கவே இல்லை என சொல்லி செழியன் உடன் சேரப் போகிறார். அதற்குள் அமிர்தாவின் முன்னாள் கணவர் சைக்கோ மாதிரி ஏதாவது ஒரு பிரச்சனையை கொண்டு வந்து விடுவார்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →