Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியா நித்தீஷ் கல்யாணம் முடிந்த கையோடு சுதாகர், பாக்யாவின் ரெஸ்டாரண்டுக்கு சென்று இனி உங்களுக்கும் இந்த ஹோட்டலுக்கும் சம்பந்தமில்லை. முழுக்க முழுக்க என்னுடைய கண்ட்ரோலுக்கு வந்துவிட்டது என்று சொல்லி பாக்கிய தலையில் மிளகாய் அரைத்து விட்டார். இதனால் நொறுங்கிப் போன பாக்கியா கோபத்துடன் வீட்டிற்கு திரும்பி வருகிறார்.
ஆனால் வந்ததும் கோபத்தை காட்ட முடியாத சூழலில் மாட்டிக் கொண்டார். அதாவது பாக்யா வரும் முன்னே இனியா நித்தேஷ் வீட்டிற்கு வந்து விட்டார்கள். இவர்கள் முன்னாடி எதுவும் பேச முடியாது என்று அமைதியாக பாக்கியா நின்றார். ஆனாலும் இந்த ஈஸ்வரி எதுவும் புரியாமல் பாக்யாவை அது சமைத்து கொடு இதை சமைத்து கொடு என்று டார்ச்சர் பண்ணி வந்தவர்களுக்கு கொடுக்க வைத்து விட்டார்.
பாக்கியாவுக்கும் வேறு வழி எதுவும் இல்லாததால் எல்லாத்தையும் சமைத்துக் கொடுத்து மகள் மற்றும் மருமகனை வழி அனுப்பி வைத்தார். அவர்கள் போனதும் பாக்யா ரெஸ்டாரண்டில் நடந்த விஷயத்தையும் சுதாகர் மொத்தமாக என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார் என்பதையும் சொல்கிறார். ஆனால் அப்பொழுது கூட செழியன், பாக்கியவை நம்பாமல் நீ சரியாக படித்துப் பார்த்திருக்க மாட்டாய்.
அவர் அப்படி ஏமாற்றக் கூடியவர் அல்ல என்று சொல்லி பாக்யாவை பைத்தியக்காரி போல் பேசுகிறார். அதற்கு பாக்கியா எல்லாம் தெரிந்த மாதிரி நீ பேச வேண்டாம், இப்படி சொல்லி சொல்லியே எல்லோரும் சேர்ந்து என்ன நம்ப வைத்து கையெழுத்து போட வைத்து விட்டீர்கள். இப்பொழுது உங்கள் எல்லாத்துக்கும் சந்தோசம் தானே, ஒரு அம்மாவாக ஜெயித்த என்னால் இலட்சியத்தில் ஜெயிக்க முடியாமல் போய்விட்டது என்று பீல் பண்ணி போய் விடுகிறார்.
இதையெல்லாம் பார்த்த பிறகு கூட ஈஸ்வரி, பாக்யாவிற்கு சப்போர்ட் பண்ணாமல் சுதாகர் அப்படி பண்ணி இருக்க மாட்டார். அவருக்கு இருக்க வசதி வாய்ப்புக்கு பாக்கியா ஹோட்டல் மூலம் வருகிற லாபம் தான் பெருசாக இருக்கப் போகிறதா என்ன? சும்மா வாய்க்கு வந்தபடி பாக்கியா ஏதோ உளறுகிறார் என்று ஈஸ்வரி, பாக்யாவை திட்டுகிறார்.
ஆனாலும் கோபிக்கு பாக்கியா சொல்வதில் ஏதோ ஒரு உண்மை இருப்பது போல் தோன்றியதால் சுதாகரிடம் போய் பேசிட்டு வருகிறேன் என்று பாக்யாவிற்காக கிளம்பி விடுகிறார். ஆனாலும் சுதாகர், கோபி காதில் பூ சுத்தி நம்ப வைத்து அனுப்பி விடுவார். ஆக மொத்தத்தில் பாக்யாவிற்கு உதவுவதற்கு யாரும் தயாராக இல்லை. இனிய மனசு வைத்தால் மட்டும்தான் பாக்கியவின் ஹோட்டல் திரும்ப கிடைக்கும்.