Sun Tv Serial: ஒரு காலத்தில் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவி அதிக புள்ளிகளை பெற்று யாரும் கிட்ட நெருங்க முடியாத அளவிற்கு ஒய்யாரத்தில் இருந்தது. ஆனால் சமீப காலமாக டிஆர்பி ரேட்டிங்கில் 8 புள்ளிகளை பெற்று கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து வருகிறது. அத்துடன் சன் டிவியுடன் போட்டி போட்டு நெருங்கும் அளவிற்கு விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சீரியல்கள் எல்லாம் மக்களை கவர்ந்து வருகிறது.
இதனால் சன் டிவியில் உள்ள பழைய சீரியல்கள் எல்லாத்தையும் ஓரம் கட்டி விட்டு புது சீரியலுக்கு அஸ்திவாரத்தை போடுவதற்கு தயாராகி விட்டார்கள். அந்த வகையில் சமீபத்தில் ஒளிபரப்பாகி வரும் ஆடுகளம் சீரியலை தொடந்து புதுசு புதுசாக சீரியல்கள் வரப்போகிறது. தற்போது வினோதினி சீரியல் ப்ரோமோ வெளிவந்தது.
மேலும் சாந்தி நிலையம் என்ற சீரியலுக்கு பதிலாக துளசி என்ற டைட்டிலை மாற்றிவிட்டு புதுசாக வரப்போகிறது. இந்த சீரியலில் நடிக்கப் போகும் கதாநாயகி கதாநாயகன் யார் என்றால் ஏற்கனவே சில நாடகங்களில் சப்போர்ட்டிங் கேரக்டரில் நடித்தவர்கள் தான்.
அதாவது சுந்தரி சீரியலில் பழனி கேரக்டரில் நடித்து வந்த அருண்குமார் ஹீரோவாக நடிக்கப் போகிறார். தற்போது இவர் சிங்க பெண்ணே சீரியலில் மித்ராவை ஒரு தலைப்பட்சமாக காதலிக்கும் அரவிந்த் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் முதல் முறையாக ஹீரோவாக துளசி என்ற சீரியலில் கமிட்டாகி இருக்கிறார்.
அடுத்ததாக இவருக்கு கதாநாயகியாக நடிக்கப் போகும் நடிகை யார் என்றால் சோனிடா ஸ்ரீகாந்த். இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தென்றல் வந்து என்னை தொடும், ஈரமான ரோஜா 2 சீரியலிலும் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
அப்படிப்பட்ட இவருக்கு முதல் முறையாக கதாநாயகியாக கிடைத்த வாய்ப்பு துளசி. இதனைத் தொடர்ந்து பராசக்தி மற்றும் வீர அனுமன் என்ற சீரியல் வரப்போகிறது. இப்படி தொடர்ந்து புதுப்புது சீரியல்களை கொண்டு வருவதால் பழைய சீரியல்களை ஒவ்வொன்றாக முடிப்பதற்கு சன் டிவி சேனல் தயாராகிவிட்டது.