Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கோமதியுடன் கோவிலுக்கு போன ராஜி அங்கே நடனப்போட்டி நடைபெறுவதை பார்த்து கலந்து கொள்வதற்கு தயாராகி விட்டார். ஆனால் ராஜி வெளியூரை சேர்ந்த பொண்ணு என்பதால் அங்கு இருப்பவர்கள் கிண்டல் அடிக்க ஆரம்பித்து மேடையில் இருந்து கீழே வரும்படி ஆர்ப்பாட்டம் பண்ணினார்கள்.
உடனே கோமதி கோபப்பட்டு ராஜியை கீழே இறங்க சொல்லுகிறார். ஆனால் ராஜி எதற்கு அசராமல் எல்லோரும் முன்னாடியும் ஆட ஆரம்பித்து விட்டார். ராஜி ஆடியதும் சூப்பர் என்று அங்கு இருந்த ஊர் மக்களும் கைத்தட்டி உற்சாகப்படுத்தி விட்டார்கள். ஆனாலும் கோமதி, ராஜி முதல் சுற்றில் ஆடி முடித்து விட்டதும் நீ போதும் ஆடியது என்று வீட்டிற்கு கூட்டிட்டு போய் விட்டார்.
அங்கே போனதும் மீனாவிடம், நான் ஆடி இரண்டாவது பரிசை பெறனும் என்ற ஆசைப்பட்டேன், ஆனால் அது இப்பொழுது நடக்குமா என்பது தெரியவில்லையே என்று சொல்கிறார். உடனே மீனா எல்லோரும் முதல் பரிசு கிடைக்கணும் என்று தான் ஆசைப்படுவாங்க. நீ என்ன இரண்டாவது பரிசுக்கு ஆசைப்படுகிறாய் என்ன விஷயம் என்று கேட்கிறார்.
அதற்கு ராஜி, அந்த போட்டியில் இரண்டாவது பரிசை பெறுபவர்களுக்கு பைக் கிப்டாக வழங்கப்படும் என்று போடப்பட்டிருக்கிறது. அதே பைக்குதான் கதிர் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். அதான் நான் வின் பண்ணி அவனுக்காக வாங்கி கொடுக்கணும் என்று நினைக்கிறேன். அப்பொழுது அங்கே வந்து நபர் ராஜி முதல் சுற்றில் வின் பண்ணிட்டாங்க அடுத்த ரவுண்டுக்கு போகணும் என்று சொல்கிறார்.
ஆனால் கோமதி அதெல்லாம் முடியாது என்று சொல்லிவிட்டு போய்விடுகிறார். பிறகு மீனா, அத்தையை நான் சமாளித்துக் கொள்கிறேன் நீ நாளைக்கு போய் டான்ஸ் பண்ணு என்று சொல்லிவிடுகிறார். அடுத்ததாக அரசிக்கு நித்திஷ் மெசேஜில் நீ சொன்ன விஷயத்தை நான் யோசித்து பார்த்தேன். எனக்கு அதில் எந்தவித தப்பும் தெரியவில்லை. நீ என்னிடம் உண்மையாக இருக்க வேண்டும் என்று சொன்னதே எனக்கு சந்தோசம்.
இப்பொழுது உனக்கு என் கூட பேச இஷ்டமா? கல்யாணம் பண்ண ஓகேவா மட்டும் சொல்லு என பேசி அனுப்பி இருக்கிறார். உடனே அரசி, அந்த வாய்ஸ் மெசேஜை மீனா மற்றும் ராஜிடம் காட்டுகிறார். அந்த வகையில் இவர்களுடைய கல்யாணம் நல்லபடியாக முடிந்து விடும். அடுத்ததாக சக்திவேல், மீனா கடையை இடித்த விஷயத்தை பற்றி முத்துவேலிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
முத்துவேல் நீ எப்படி கடை இடிக்கும் போது சும்மா பார்த்துக் கொண்டிருந்தாய், அந்த நிமிஷமே தடுத்து இருக்கணும் என்று சொல்லி பேசிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது குமரவேலு இன்னொரு லெட்டர் வந்து கொடுக்கிறார், அதை சக்திவேல் படித்துப் பார்த்தபொழுது இன்னொரு குடோனை இடிப்பதற்கு ஆடர் வந்திருப்பதாக சொன்னார். இதை கேட்டதும் கோவப்பட்ட முத்துவேல், அந்த மீனா அந்த வேலையில் இருந்தால் தானே இவ்ளோ தூரம் பிரச்சினை பண்ணுவாள்.
அந்த வேலையை விட்டு மீனாவை தூக்கும் அளவிற்கு நீ ஏதாவது வேலையை பாரு என்று சொல்லி விடுகிறார். இதுவரை முத்துவேல் எந்த பெர்மிஷன் கொடுக்காமலேயே சும்மா சக்திவேல் ஆடினார். முதல் முறையாக முத்துவேல் இதற்கு சம்மதம் தெரிவித்த நிலையில் இதில் ஏதாவது சூழ்ச்சி பண்ணி மீனாவை வேலையை விட்டு தூக்கிவிடும் என்று சக்திவேல் முடிவு பண்ணி விட்டார்.