கங்காவால் காவேரிக்கு ஏற்படும் நெருக்கடி.. உறுதுணையாக நிற்கும் நவின்

Mahanadi serial : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் இப்போது அதிரடி திருப்பங்கள் நடந்து வருகிறது. இதில் காவேரி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை எப்படியாவது விஜய்யிடம் சொல்ல வேண்டும் என்று பல முயற்சிகள் மேற்கொள்கிறார்.

ஆனால் வெண்ணிலாவுக்கு நினைவு தெரிந்ததால் விஜய்யால் அவரை விட்டு வெளியே வர முடியவில்லை. மேலும் காவேரி கர்ப்பமாக இருக்கும் விஷயம் நவினுக்கு மட்டும் தற்போது தெரிந்துள்ளது.

இந்த சூழலில் கங்காவால் காவேரிக்கு பிரச்சனை ஏற்பட இருக்கிறது. அதாவது கங்காவும் கர்ப்பமாக இருக்கிறாள். இந்த விஷயம் வீட்டுக்கு தெரிந்தவுடன் எல்லோரும் அவர்களை தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்.

மகாநதி சீரியலில் காவேரிக்கு ஏற்பட்ட சிக்கல்

இதனால் நவின் ஒரு ஏக்கத்துடன் காவேரியை பார்க்கிறார். மேலும் கங்கா தன் வீட்டுக்கு முதல் வாரிசை கொண்டுவரப் போகிறார் என்று அவரது அம்மா மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார். இதனால் காவேரியை வேலை வாங்குகிறார்.

இனிமேல் கங்காவால் அடுப்பாங்கரை வேலை பார்க்க முடியாது. நீதான் எல்லாத்தையும் பார்த்துக்கணும் என்று காவேரியிடம் சொல்கிறார். வேறு வழியில்லாமல் காவேரியும் எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்கிறார்.

இதுவே காவேரி கர்ப்பமாக இருக்கும் விஷயம் விஜய் மற்றும் தாத்தா பாட்டிக்கு தெரிந்தால் தரையில் கால் கூட பட விடாமல் அப்படி தாங்குவார்கள். அந்த நாள் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.