ஜீவானந்தத்தை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சைக்கோ..
Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்வதற்கு ஏற்ப கதையில் பல ட்விஸ்ட்கள் வரப்போகிறது. அதாவது கடந்த இரண்டு மாதங்களாக இந்த நாடகத்திற்கு மக்களிடம் இருந்து பெருசாக சொல்லும்படி வரவேற்பு கிடைக்கவில்லை. அதனால் இப்ப நடக்கிற திருவிழா நிகழ்ச்சி மூலம் அனைவரையும் கவர்ந்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் எதிர்நீச்சல் மொத்த டீமும் போராடி வருகிறார்கள்.
அதன் வாயிலாக இதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திட்டத்தை போட்டுக் கொண்டு வருகிறார்கள். அதில் அப்பத்தாவிடம் இருக்கும் 40% சொத்துக்கு முதலில் ஒரு முடிவை கட்டப் போகிறார். இந்த ஒரு விஷயம் கண்டிப்பாக குணசேகரனுக்கு சாதகமாக இருக்கப் போவதில்லை. இதனால் குணசேகரன் மற்றும் கதிரின் மொத்த கோபமும் அப்பத்தா மீது திரும்பப் போகிறது.
அதனால் அப்பத்தாவின் உயிருக்கு கூட இவர்களால் ஆபத்து வரலாம். அதே மாதிரி குணசேகரன் அப்பத்தாவிற்கு ஏதோ கெடுதல் பண்ணப் போகிறார் என்று அந்த வீட்டில் உள்ள மருமகள்கள் தெரிந்துகொண்டு அப்பத்தாவிற்கு காவலாக நிற்கப் போகிறார்கள். அடுத்ததாக ஜீவானந்தம் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க வரப்போவதில்லை.
அதற்கு பதிலாக தன் மனைவியைக் கொன்ற குணசேகரனின் உயிரை எடுப்பதற்கு காய் நகர்த்தப் போகிறார். இதற்கிடையில் குணசேகரன் ஏற்பாடு பண்ணின வளவன் மூலம் ஜீவானந்தத்தை ஸ்கெட்ச் போட்டு தூக்கப் போகிறார்கள். ஏற்கனவே வளவன் சைக்கோ மாதிரி ஜீவானந்தத்தின் மீது கொலைவெறியில் சுற்றிக் கொண்டு வருகிறார். அப்படிப்பட்டவர் ஜீவானந்தத்தை என்ன வேண்டுமானாலும் செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.
அடுத்தபடியாக ஜீவானந்தத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அப்பத்தா அவருக்கு போன் பண்ணியும் எந்தவித பதிலும் இல்லாததால் ஈஸ்வரிடம் போய் கேட்கிறார். ஆனால் ஈஸ்வரியோ எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் தெரியாது என்று சொல்லிவிடுகிறார். இவருடைய கேரக்டர் எப்படி இருக்கிறது என்றால் ஜீவானந்தத்திடம் பேசிய விஷயங்கள் எதையும் ரேணுகா, நந்தினி மற்றும் ஜனனிடம் சொல்லவில்லை.
அதே மாதிரி ஆரம்பத்தில் கயல்விழி இறப்பிற்கு காரணம் குணசேகரன் மற்றும் கதிர் தான் என்ற உண்மையையும் ஜீவானந்திடம் சொல்லாமல் மறைத்து விட்டார். ஆக மொத்தத்தில் இந்த ஈஸ்வரி யாருக்குமே உண்மையாக இல்லை. ஆனால் இதில் ஜீவானந்தத்தின் உயிருக்கு மட்டும் ஏதோ ஆபத்து வரப்போகிறது என்பது தெரிகிறது. அத்துடன் வெண்பா ஈஸ்வரியை பார்க்க வேண்டும் என்று அடம் பிடித்ததால் ஃபர்கானா திருவிழாவிற்கு வெண்பாவை கூட்டி வந்து விடுகிறார். இந்த சூழலில் ஈஸ்வரி ஜீவானந்தத்தின் மகள் வெண்பாவிற்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாக்கப் போகிறார்.
