சிங்கப்பெண்ணில் சரவெடியாய் எதிர்பார்க்கப்பட்ட துளசி கேரக்டர்.. புஸ்வாணமாய் போனதற்கு இதுதான் காரணமாமே!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியல் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. ஒரு பக்கம் அன்புவின் அம்மா லலிதா ஆனந்தியை தன்னுடைய மருமகளாக ஏற்றுக் கொண்டார்.

இன்னொரு பக்கம் வார்டன் மூலம் மகேஷ் அழகப்பனை திருமணத்திற்கே சம்மதிக்க வைத்து விட்டான். இனி ஆனந்திக்கு திருமணம் யாருடன் நடக்கும் என ஒன்று இரண்டு மாதங்களுக்கு எபிசோடுகள் நகரலாம்.

அதற்குள் வேலுவும் குடும்பத்துடன் சேர்ந்து விடுவான். சீரியலின் கிளைமாக்ஸ் மகேஷ் அன்பு மற்றும் ஆனந்தி காதலை தெரிந்து கொண்டு விட்டு கொடுக்கிறானா என்பது மட்டும் தான்.

இதற்கிடையில் வார்டனின் ஃப்ளாஷ்பாக் காட்சிகள் வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. சிங்க பெண்ணில் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட கேரக்டர் என்றால் அது துளசி தான்.

புஸ்வாணமாய் போனதற்கு இதுதான் காரணமாமே!

அன்பு மற்றும் ஆனந்தி காதலித்து துளசி பெரிய அளவில் இடைஞ்சலை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கும் என நினைக்கப்பட்டது.

அதே மாதிரி இந்த துளசி கேரக்டர் மகேஷுக்கு ஜோடியாகும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துளசியை கண்ணில் காட்டாமல் அந்த கேரக்டரையே முடித்து வைத்து விட்டார்கள்.

துளசி உள்ளே வருவது, மகேஷ் மற்றும் துளசி காதலிப்பது என்பது போல் தான் முதலில் சீரியல் நகர்ந்தது. ஆனால் தற்போது சீரியலை சீக்கிரம் முடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.

இதற்கு காரணம் இயக்குனர் திருமுருகனின் நாதஸ்வரம் 2 சீரியல் வர இருப்பது தான் என தகவல் வெளியாகி இருக்கிறது.

மெட்டிஒலி 2 அல்லது நாதஸ்வரம் 2 சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதனால் தான் சிங்க பெண்ணே சீரியலுக்கு சுபம் போட இருக்கிறார்கள்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment